AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சியா என்ட்ரி லோடிங்… இன்று மாலை வெளியாகும் ஓம் படத்திலிருந்து மம்முட்டியின் கிளிம்ப்ஸ் வீடியோ!

Mammootty Birthday: மம்முட்டி நடிப்பில் தமிழ் சினிமாவில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவரும் ஆக்ஷன் படம்தான் ஓம். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிகட்டததை எட்டியுள்ளது. இந்நிலையில் இன்று (05/09/20260 மம்முட்டி தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், ஓம் படத்திலிருந்து சிறப்பு அப்டேட் வெளியாகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சியா என்ட்ரி லோடிங்… இன்று மாலை வெளியாகும் ஓம் படத்திலிருந்து மம்முட்டியின் கிளிம்ப்ஸ் வீடியோ!
மம்முட்டி ஓம் திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 05 Sep 2026 13:50 PM IST

தென்னிந்திய சினிமாவில் நாயகனாக நடித்து அசத்திவருபவர் மம்முட்டி (Mammootty). இவர் மலையாளசினிமாவில் தொடர்ந்து திரைப்படங்களில் நாயகனாக நடித்து அசத்திவருகிறார். இவரின் நடிப்பில், மலையாளத்தில் ஆண்டுக்கு 2 முதல் 3 படங்கள் வெளியாகுவது வழக்கமாகவே உள்ளது. அந்த விதத்தில் 2026ம் ஆண்டில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் பேட்ரியாட் (Patriot). இதில் மோகன்லால் (Mohanlal) இணைந்து நடித்திருந்த நிலையில், திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின் மம்முட்டி நடித்துவரும் தமிழ் திரைப்படம்தான் ஓம் (OM). அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி (Rajkumar Pariasamy) இயக்க, தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்துக்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விதத்தில், இன்று (05/09/2026) நடிகர் மம்முட்டி தனது 74வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அந்த விதத்தில் இவரின் பிறந்தநாளை சிறப்பாகும் விதத்தில், ஓம் படக்குழு இவர் நடித்துவரும் கதாபாத்திரத்தின் அறிமுக வீடியோவை இன்று மாலை 5 மணியளவில் வெளியிடுகிறதாம். இது தொடர்பான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில், இணையத்தில் வைரலாகிவருகிறது. இந்நிலையில், மம்முட்டியின் கதாபாத்திரம் எவ்வாறு இருக்கும் என எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

இதையும் படிங்க: சூர்யாவின் 47வது திரைப்படத்தின் ஆடியோ ரைட்ஸை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! – வைரலாகும் பதிவு!

ஓம் படத்திலிருந்து மம்முட்டியின் பர்த்டே ஸ்பெஷல் அப்டேட் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

நடிகர் மம்முட்டி நடித்துவரும் ஓம் படம்:

தனுஷ் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க, நடிகர் மம்முட்டி மிகவும் பிரம்மாண்டமான வேடத்தில் நடிக்கிறார். இதில் மம்முட்டி மிகவும் சிறப்பான கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இதில் மம்முட்டி சியா கார்த்திகேயன் என்ற வேடத்தில் நடிக்கிறாராம். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கிய நிலையில், சென்னை மற்றும் வெளிநடக்குகளிலும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க: சிலம்பரசனின் அரசன் படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிரியங்கா மோகன்?

இப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட 90 சதவீதம் நிறைவடைந்திருக்கும் நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டிருந்தது. வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதியில் இந்த படமானது திரையரங்குகளில் வெளியாகிறதாம். ஆனால் இன்னும் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுவரும் நிலையில், ரிலீஸ் தேதி தள்ளிபோவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாம். விரைவில் இப்படத்தின் ரிலீஸை படக்குழு உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us