Suriya47: சூர்யாவின் 47வது திரைப்படத்தின் ஆடியோ ரைட்ஸை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! – வைரலாகும் பதிவு!
Suriya47 Update: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் சூர்யா. இவர் மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில், தனது 47வது படத்தில் இணைந்துள்ளார். அந்த விதத்தில், இன்று (05/09/2026) இப்படத்திலிருந்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. தற்போது இது குறித்து விவரமாக பார்க்கலாம்.
மலையாள இயக்குநர் ஜித்து மாதவனின் (Jithu Madhavan) இயக்கத்தில், நடிகர் சூர்யா (Suriya) இணைந்துள்ள பிரம்மாண்ட படம்தான் சூர்யா47 (Suriya47). இப்படமானது தற்காலிகமாக சூர்யா47 என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு இறுதியிலே தொடங்கியிருந்தது. இந்த படத்தில் நடிகர் சூர்யா ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை நஸ்ரியா நஸீம் (Nazriya Nazim) நாயகியாக நடித்திருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் கேரளம் மற்றும் சென்னை போன்ற பகுதிகளில் சிறப்பாக நடைபெற்றுவந்தது. மேலும் இதில்; மலையாள சினிமாவில் இளம் நடிகர் நஸ்லென் மிகவும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தை சூர்யாவின் புது தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டூடியோஸ் தயாரிக்க, மலையாள இசையமைப்பாளர் சுஷீன் ஷியாம் இசையமைத்துவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இப்படத்திலிருந்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: தியேட்டரில் வெளியாகும் அஜித்தின் கிளாடியேட்டர் டிரெய்லர் – எங்கெல்லாம் தெரியுமா?
சூர்யாவின் 47வது திரைப்படத்திலிருந்து வெளியான முக்கிய அப்டேட் குறித்த எக்ஸ் பதிவு :
Breaking the silence. Shattering the ordinary. 💿⚡
Elated to associate with @SonyMusicSouth for #Suriya47! 🎶
A @sushintdt musical. 🔥@Suriya_offl #NazriyaFahadh#Naslen #JithuMadhavan@ChethanDsouza @ZhagaramOffl @2D_ENTPVTLTD#S47OnSonyMusic pic.twitter.com/WTvOJTCthv
— Zhagaram Studios (@ZhagaramOffl) September 5, 2026
சூர்யாவின் 47வது படமானது அதிரடி ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை போன்ற கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாம். இதில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடிக்க, பீல் குட் காதல் கதையும் இப்படத்தில் உள்ளதாம். இப்படத்திலிருந்து அப்டேட்டுகள் வெளியாகி பல மாதங்களான நிலையில், முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. சூர்யா47 படத்தின் இசை ரிலீஸ் உரிமையை சோனி மியூசிக் சவுத் என்ற நிறுவனம் பெற்றுள்ளதாம்.இது குறித்த அறிவிப்பை படக்குழு பகிர்ந்துள்ளது.
சூர்யாவின் 47வது படத்தின் ரிலீஸ் எப்போது இருக்கும்:
நடிகர் சூர்யாவின் நடிப்பில், இந்த 2026ம் ஆண்டில் கிட்டத்தட்ட 2 படங்கள் வெளியாகிவிட்டது. இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் கருப்பு திரைப்படமும், இயக்குநர் வெங்கி அட் லூரியின் இயக்கத்தில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படங்களும் வெளியாகியிருந்தது. இந்த இரு படங்களும் கிட்டத்தட்ட ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது. அந்த விதத்தில் சூர்யாவின் 47வது திரைப்படம் 2026ம் ஆண்டில் வெளியாக வாய்ப்புகள் குறையவு என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: படகுப் பந்தயக் காட்சிகளுடன்… வெளியானது சூரியின் மண்டாடி படத்தின் ட்ரெய்லர்!
மேலும் சூர்யா தற்போது, இயக்குநர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் 48வது படத்தில் இணைந்திருக்கிறார். இந்த படம் உண்மையான கதையை மையமாக கொண்டு உருவாகும் ஒரு படமாக அமைந்துள்ளது. சூர்யா மற்றும் நஸ்ரியாவின் காம்போ முதல் முறையாக சூர்யா47 படத்தில் இணைந்துள்ள நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. அந்த விதத்தில் 2027ம் ஆண்டு கோடைவிடுமுறையில் இப்படம் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.



