AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சூர்யா 47 படத்தின் ரிலீஸ் எப்போது? நடிகர் சூர்யா விளக்கம்

Suriya 47 Movie Release Update Viral On Social Media | தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக உள்ள நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி உள்ள சூர்யா 47 படத்தின் ரிலீஸ் எப்போது இருக்கும் என்று நடிகர் சூர்யா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சூர்யா 47 படத்தின் ரிலீஸ் எப்போது? நடிகர் சூர்யா விளக்கம்
சூர்யாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 04 Aug 2026 11:02 AM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் அடுத்தடுத்துப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக வரிசையாக காத்திருக்கின்றது. அதன்படி இந்த 2026-ம் ஆண்டில் தொடக்கத்தில் கருப்பு படம் திரையரங்குகளில் வெளியானது. அதனைத் தொடர்ந்து வருகின்ற 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு சூர்யாவின் நடிப்பில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படக்குழுவினர் தொடர்ந்து படத்தின் புரமோஷன் பணிகளில் விறுவிறுப்பக ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் நடிப்பில் சூர்யா 47 படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யா இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா 48 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் சூர்யா சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் சூர்யா 47 படம் குறித்து பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சூர்யா 47 படத்தின் ரிலீஸ் எப்போது?

அதன்படி நடிகர் சூர்யா அந்தப் பேட்டியில் பேசியதாவது, சூர்யா 47 படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. சமீபத்தில் வெளியான பாலன் தி பாய் (Bala) படத்தின் மூலம் பெரும் வெற்றி கண்ட ஜித்து மாதவன் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படம் எனது சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படுகிறது. இப்படம் இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் ரசிகரக்ளிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… திருமணம் வரை மட்டுமல்லாமல்… காதல் நிலையானதாக இருக்க வேண்டும் – நடிகர் சூர்யா

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… நடிகர் கிருஷ்ணாவில் 25-வது படத்தின் போஸ்டரை வெளியிட்ட கார்த்திக் சுப்பராஜ்

Follow Us