AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Sasikumar: அரசியலுக்கு வருவீர்களா? என்ற கேள்வி மட்டும் மாறவே இல்லை – சசிகுமார்!

Sasikumar About Politics: கோலிவுட் சினிமாவில் இயக்குநராக நுழைந்து, நடிகராக காலத்தை தள்ளிவருபவர் சசிகுமார். இவர் அண்மையில் வதந்தி 2 என்ற வெப் தொடரில் லீட் நாயகனாக நடித்துள்ளார். இதன் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றிருந்தது. அதில் செய்தியாளர் ஒருவர், அவரிடம் அரசியலுக்கு வருவீர்களா? என கேள்வி கேட்ட நிலையில், அதற்கு தக்க பதிலடியை கொடுத்துள்ளார்.

Sasikumar: அரசியலுக்கு வருவீர்களா? என்ற கேள்வி மட்டும் மாறவே இல்லை – சசிகுமார்!
அரசியல் பற்றி சசிகுமார்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 01 Aug 2026 20:23 PM IST

சினிமாவின் ஆரம்பத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி தனது வாழ்க்கையை தொடங்கியவர் நடிகர் சசிகுமார் (Sasikumar). இவரின் இயக்கத்தில் இதுவரையில் மொத்தம் இரு படங்களே உருவாகியுள்ளது. இதற்கு பின் முழுமையாக கதாநாயகனாகவே சினிமாவில் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். தற்போது வரை கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக படங்களில் ஹீரோவாக மற்றும் சில படங்களில் முக்கியமான வேடங்களில் சசிகுமார் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் சினிமாவில் இறுதியாக வெளியான திரைப்படம் மை லார்ட் (My Lord). இந்த படமானது கடந்த 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இப்படம் திரையரங்குகளில் வெளியகியிருந்தது. இப்படத்திற்கு பின் அறிமுக இயக்குநர்களின் இயக்கத்தில் சில படங்களில் நடித்துவந்தார். இந்த வரிசையில் இயக்குநர் ஆண்ட்ருஸ் லூயிஸ் (Andrew Louis) இயக்கத்தில் நடித்துவந்த வெப் தொடர்தான் வதந்தி 2 (Vadhandhi 2).

இந்த வதந்தி 2 வெப் தொடரில் சசிகுமார் முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அண்மையில் இந்த வெப் தொடரின் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, சசிகுமாரிடம் நீங்கள் அரசியல் வருவீர்களா? என கேள்வி கேட்ட நிலையில், அதற்கு நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.

இதையும் படிங்க: லைகா புரடெக்‌ஷன் உடன் ஒரு எமோஷ்னல் கனெக்‌ஷன் உள்ளது – ஜேசன் சஞ்சய்

அரசியல் வருவீர்களா என்பது குறித்த கேள்விக்கு சசிகுமாரின் நகைச்சுவையான பதில்:

அந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய சசிகுமார், “அமேசான் பிரைம் நிறுவனம் என்னையே நியதியாகதான், வரிசையாக கூப்பிட்டு பேச வைத்தார்கள். நான் நேரடியாக வந்து பேசவா என கேட்டதற்கு, வரிசையாக போகவேண்டும் என அவர்களே கூறுகிறார்கள். அவ்வாறு எல்லாமே மாறிவியோட்டது, ஆனால் உங்களின் கேள்விகள் மட்டும் இன்னும் மாறவில்லை. ஆனால் உங்களுக்கு மட்டும் இன்னும் எதுவுமே மாறவில்லையே டா. அமேசான் பிரைம் முதலில் அவர்களுக்கு (செய்தியாளர்களுக்கு) ஒரு நெறிமுறையை கொடுங்க.

இதையும் படிங்க: விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் ராதிகாவின் கதாப்பாத்திரம் ஜாலியா இருக்கும் – வெங்கி அட்லூரி

எங்களையெல்லாம் நெறிமுறையை போட்ட அவங்க உங்களுக்கும் நெறிமுறையை போடணும். இப்படித்தான் கேள்வி கேக்கணும், கேட்ககூடாதுனு அவங்க சொல்லணும். தம்பிகளா எனக்கு அரசியல் வரவேண்டும் என்றும் எண்ணம் இல்லப்பா, நான் நடிக்கணும் நடிச்சு முன்னேறணும்” என அதில் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

அரசியல் வருகை குறித்து நகைச்சுவையாக பதிலளித்த சசிகுமார் பேசிய வீடியோ பதிவு:

சசிகுமாரின் வதந்தி 2 வெப் தொடரானது சிறப்பாக கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வெப் தொடரானது கொலை வழக்கு மற்றும் வதந்திகள் தொடர்பான கதையில் உருவாகியுள்ளது. இந்த வெப் தொடரானது வரும் 2026ம் ஆண்டு 07ம் தேதியில் அமேசான் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

Follow Us