AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

லைகா புரடெக்‌ஷன் உடன் ஒரு எமோஷ்னல் கனெக்‌ஷன் உள்ளது – ஜேசன் சஞ்சய்

Jason Sanjay talks about the Lyca Production | இயக்குநராக ஜேசன் சஞ்சய் தற்போது சிக்மா படத்தின் மூலம் அறிமுகம் ஆகிறார். இவரது முதல் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா புரடெக்‌ஷன்ஸ் குறித்து பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

லைகா புரடெக்‌ஷன் உடன் ஒரு எமோஷ்னல் கனெக்‌ஷன் உள்ளது – ஜேசன் சஞ்சய்
லைகா சுபாஸ்கரன் - ஜேசன் சஞ்சய்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 01 Aug 2026 17:19 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக உள்ளது லைகா புரடெக்‌ஷன். இந்த நிறுவனம் கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் தான் முதன் முறையாக இந்த நிறுவனம் தயாரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி தமிழ் சினிமாவில் இந்த லைகா புரடெக்‌ஷன்ஸ் நிறுவனம் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய், விஜய் ஆண்டனி, தனுஷ், சிம்பு, ரஜினிகாந்த், சூர்யா, சிவகார்த்திகேயன், சியான் விக்ரம், கமல் ஹாசன் மற்றும் அஜித் குமார் ஆகியோர் படங்களை இயக்கி உள்ளனர். இவர்கள் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் தற்போது படங்களை தயாரித்து வருகிறார்கள். இவர்களின் தயாரிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த லைகா புரடெக்‌ஷன் சார்பாக இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான படம் பரிமளா அண்ட் கோ. இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றிப் பெற்றது. மேலும் இந்தப் படத்தை தொடர்ந்து லைகா புரடெக்‌ஷன் சார்பாக தமிழ் சினிமாவில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் சிக்மா. இந்தப் படத்தின் இயக்குநர் ஜேசன் சஞ்சய் சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

லைகா புரடெக்‌ஷன் உடன் ஒரு எமோஷ்னல் கனெக்‌ஷன் உள்ளது:

லைகா புரொடக்ஷனின் முதல் படம் அப்பாவுடன் கத்தி, என்னுடைய முதல் படம் லைகா புரொடக்ஷனுடன் சிக்மா. அதனால், இதற்கு ஒரு உணர்வுப்பூர்வமான தொடர்பு இருக்கிறது. நாங்கள் இந்தப் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் படமாக்கியுள்ளோம். திரைக்கதை நேர்கோட்டில் அமையாது. சிக்மா என்ற தலைப்பு தனித்துச் செயல்படும் குணத்தைக் குறிப்பதால், சமூகம் அந்தக் கதாபாத்திரத்தை ஒரு பலவீனமானவனாகப் பார்க்கிறது. யாரும் நம்பாதபோது, ​​அவன் தன்னைத் தானே நம்புகிறான் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… என் அப்பாகிட்ட யுவன் சாருக்கு போட்டோ அனுப்ப சொல்லுவேன் – ஜேசன் சஞ்சய் சொன்ன விசயம் சுவாரஸ்ய சம்பவம்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… நானியின் தி பாரடைஸ் படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

Follow Us