AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Hi Movie: பச்சப் புள்ள… கவின் – நயன்தாராவின் ஹாய் படத்திலிருந்து வெளியான 3வது சிங்கிள்!

Pacha Pulla Video Song: கவின் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்திருக்கும் ரோம்-காம் திரைப்படம்தான் ஹாய். இதை இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்க, நயன்தாராவின் ரௌடி பிக்ச்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்திலிருந்து ஏற்கனவே இரு பாடல்கள் வெளியான நிலையில், தற்போது 3வது பாடலான பச்சப் புள்ள என்ற பாடல் வெளியாகியுள்ளது.

Hi Movie: பச்சப் புள்ள… கவின் – நயன்தாராவின் ஹாய் படத்திலிருந்து வெளியான 3வது சிங்கிள்!
பச்சப் புள்ள வீடியோImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 30 Jul 2026 20:24 PM IST

சின்னத்திரை தொடர்களின் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர் கவின் ராஜ் (Kavin raj). சீரியலில் ஹீரோவாக நடித்துவந்த இவர், சினிமாவிலும் ஹீரோவாக நடிக்க தொடங்கிவிட்டார். இவர் தற்போது சினிமாவில் கிட்டத்தட்ட 6 படங்களுக்கும் மேல் கதாநாயகனாக நடித்துவிட்டார். இவரின் நடிப்பில் சினிமாவில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம் மாஸ்க் (Mask). கடந்த 2025ம் ஆண்டு இறுதியில் வெளியாகியிருந்த இப்படமானது மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இப்படத்திற்கு பின், கவின் நடித்துவந்த காதல் திரைப்படம்தான் ஹாய் (Hi Movie). பாடலாசிரியர் விஷ்ணு எடவன் (Vishnu Edavan) இயக்குநராக இயக்கியுள்ள முதல் படம்தான் இந்த ஹாய்.

இதில் கவின் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா (Nayanthara) கதாநாயகியாக நடித்துள்ளார். ரோமெண்டிக் காதல் கதைக்களத்தில் உருவான இப்படம் வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. அதை முன்னிட்டு தற்போது இப்படத்திலிருந்து 3வது பாடல் “பச்சப் புள்ள” (Pacha Pulla) வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: அது ஒரு முன்னோட்டம் மட்டுமே.. ரஜினியுடன் தர்மன் படத்தில் நடிப்பது குறித்து பகிர்ந்த நடிகை சிம்ரன்!

கவின் மற்றும் நயன்தாராவின் ஹாய் திரைப்படத்திலிருந்து வெளியான பச்சப்புள்ள பாடல் குறித்த எக்ஸ் பதிவு:

இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இப்படத்தின் இசையமைப்பாளராக பணியாயற்றியுள்ள நிலையில், பின்னணி இசை மற்றும் பாடல்கள் தயாராகியுள்ளது.இப்படத்தில்;இருந்து இதுவரை 2 பாடல்கள் வெளியிடப்பட்ட நிலையில், ரிலீஸ் தேதி கிட்ட நெருங்கும் நிலையில், 3வது பாடலை வெளியிட்டுள்ளது. “பச்சப்புள்ள” என்ற இந்த மூன்றாவது பாடலை பாடகர் சத்யா நாராயணன் பாடியுள்ளார். தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ பாடல் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

கவின் – நயன்தாராவின் படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்:

இந்த ஹாய் திரைப்படமானது முழுக்க காதல், காமெடி மற்றும் குடும்ப பொழுதுபோக்கு கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பாக்யராஜ், நயன்தாரா, கவின், பூர்ணிமா, ராதிகா சரத்குமார் உள்ளிட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ள நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியில் வெளியாகிறது.

இதையும் படிங்க: ரத்தம் தெறிக்க தெறிக்க.. வெளியானது லோகேஷ் கனகராஜின் ‘டிசி’ படத்தின் ரிலீஸ் ட்ரெயிலர்..!

இப்படத்துடன் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் மற்றும் விஷாலின் மகுடம் போன்ற படங்களும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இப்படத்திற்கு சென்சார் குழு யு/ஏ தரச் சான்றிதழ் பரிந்துரைத்துள்ளதாம். அதனால் 13 வயதிற்கு மேற்பட்ட பிரபலங்கள் இப்படத்தை திரையரங்குகள் சென்று பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us