AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இரட்டை குழந்தைகளுக்கு அப்பாவானார் நடிகர் கவின் – குவியும் வாழ்த்து

Actor Kavin becomes a father to twins | தமிழ் சினிமாவில் பிரபல நாயகனாக வலம் வருபவர் நடிகர் கவின். இவர் கடந்த 2023-ம் ஆண்டு மோனிகா என்பவரை திருமணம் செய்துகொண்ட நிலையில் தற்போது அவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது.

இரட்டை குழந்தைகளுக்கு அப்பாவானார் நடிகர் கவின் – குவியும் வாழ்த்து
மனைவியுடன் நடிகர் கவின்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 30 Jul 2026 14:42 PM IST

தமிழ் சினிமாவில் தற்போது பிரபல நாயகனாக வலம் வருபவர் நடிகர் கவின். இவர் வெள்ளித்திரையில் நாயகனாக அறிமுகம் ஆவதற்கு முன்னதாக சின்னத்திரையில் சீரியல்களில் நடிப்பதன் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார். தொடர்ந்து சீரியல்களில் நடிக்கும் போதே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் கவனத்தையும் பெற்று வந்தார். அதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் படங்களில் நடிக்கத் தொடங்கினார். இவர் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் பெரிய அளவில் வரவேற்பைப் பெற முடியவில்லை. அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு தமிழ் நாட்டு மக்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்தார். இந்த நிகழ்ச்சிகுப் பிறகு நடிகர் கவினுக்கு திரையுல வாழ்க்கையில் தொடர்ந்து வெற்றி முகமாகவே இருந்து வருகின்றது.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றார். இந்த நிலையில் நடிகர் கவின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஹாய். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் நடிகர் கவின் தனது ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் இல்லை இரண்டு குட் நியூஸ் கூறியுள்ளார்.

இரட்டை குழந்தைகளுக்கு அப்பாவானார் நடிகர் கவின்:

அதன்படி நடிகர் கவின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தனக்கு குழந்தை பிறந்து உள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு காதலி மோனிகாவை கரம் பிடித்த நடிகர் கவின் தற்போது தந்தையாகி உள்ளார். தந்தை ஆனது ஒரு மகிழ்ச்சியான செய்தி என்றாலும் அவர் இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானது இரட்டிப்பு மகிழ்ச்சி ஆகும். மேலும் அதில் ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை பிறந்து உள்ளதாக நடிகர் கவின் அவரது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார். இந்த நல்ல விசயத்தை அறிந்த ரசிகர்களும் பிரபலங்களும் நடிகர் கவினுக்கு தங்களது வாழ்த்துகளை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.

Also Read… ப்ரீ புரடெக்‌ஷனில் தீவிரம் காட்டும் மாவீரன் 2 படக்குழு? வைரலாகும் தகவல்

நடிகர் கவின் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… இது ராமயுகத்தின் உதயம்… அதிகாலையிலேயே வெளியானது ராமாயணா படத்தின் ட்ரெய்லர்

Follow Us