Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Kavin: லோகாவில் நஸ்லென் போன்று நானும் நடிக்கிறேன்.. ஆனால் – நடிகர் கவின் பகிர்ந்த விஷயம்!

Kavin Raj About Female Lead Character Film: தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் கவின். இவரின் நடிப்பில் கிஸ் படமானது வெளியாகவுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர் லோகா படத்தைப் போல, பெண் கதாப்பாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் சிறிய வேடத்தில் நடித்துவருவதாக தெரிவித்துள்ளார்.

Kavin: லோகாவில் நஸ்லென் போன்று நானும் நடிக்கிறேன்.. ஆனால் – நடிகர் கவின் பகிர்ந்த விஷயம்!
நடிகர் கவின் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 18 Sep 2025 23:07 PM IST

நடிகர் கவின் (Kavin Raj), ஆரம்பத்தில் தமிழ் சின்னத்திரை தொடர்களில் கதாநாயகனாக நடித்து வந்தார். சரவணன் மீனாட்சி சீசன் 2 தொடரில் முக்கிய நாயகனாக நடித்து மக்களிடையே பிரபலமானார். தொடர்ந்து சினிமாவில் நடிக்க தொடங்கினார். மேலும் பிக்பாஸ் (Bigg Boss) நிகழ்ச்சியிலும் பங்குபெற்று ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். இதை அடுத்தாக இவருக்கு தொடர்ந்து படங்கள் வெளியாகிவந்த நிலையில், அதில் டாடா (Dada)என்ற படமானது பிரம்மாண்ட வெற்றியை கொடுத்திருந்தது. இந்த படத்தின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார். தொடர்ந்து ஸ்டார் (Star), பிளடி பெக்கர் என படங்ககளில் நடித்து வந்தார். மேலும் இவரின் நடிப்பில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் படம்தான் கிஸ் (Kiss).

இந்த படமானது 2025 செப்டம்பர் 19 ஆம் ஆண்டு முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் ப்ரோமோஷன் தொடர்பாக நேர்காணல் ஒன்றில் கவின் கலந்துகொண்டார். அதில் பேசிய கவின், “லோகா படத்தில் நஸ்லென் கதாபாத்திரம் போல, நானும் ஒரு படத்தில் நடிக்கிறேன்” என கூறியுள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : 4வது முறையாக சாதனை.. சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ பட மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிப்பது குறித்த கவின் பேச்சு

நேர்காணல் ஒன்றில் தொகுப்பாளர் கவினிடம், லோகா படத்தில் நடிகர் நஸ்லென் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்திருந்தார். அதுபோல் நீங்கள் எதாவது படத்தில் நடித்திருக்கிர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கவின், “நான் இன்னும் லோகா படத்தை பார்க்கவில்லை, ஆனால் நானும் அதுபோன்ற வேடத்தில் படம் நடிக்கிறேன். ஆனால் அது என்ன படம் என்பது சொல்லமுடியாது. நான் மாஸ்க், நயன்தாரா மேம் கூட ஒரு படம் மேலும் புதுசா 2 படத்தில் நடிக்கவிருக்கிறேன். இந்த படங்களில் ஏதுவாகவேண்டுமானாலும் இருக்கலாம்.

இதையும் படிங்க : பிரபாஸின் ‘கல்கி 2898ஏடி’படத்திலிருந்து தீபிகா படுகோன் நீக்கம் – காரணம் என்ன?

இந்த கேள்வியை அப்படியே வைத்துக்கொள்ளுங்கள், எதிர்காலத்தில் இது பற்றி பேசலாம். நான் பெண் லீட் கதாபாத்திரம் கொண்ட படத்தில், அங்கீகாரம் இல்லாத வேடத்தில் நடிக்கிறேன், அது என்ன படம் என்னு சொன்னால் இப்போது நன்றாக இருக்காது. கிஸ் படத்தின் ப்ரோமோஷனுக்கு வந்து, அந்த படத்தை பற்றி சொன்னால் நன்றாக இருக்காது” என்று நடிகர் கவின் அந்த நேர்காணலில் தெளிவாக பேசியிருந்தார்.

கவின் பேசிய வீடியோ பதிவு :

கவினின் புதிய படங்கள் :

நடிகர் கவின், வெற்றிமாறன் தயாரிப்பில் மாஸ்க் என்ற படத்திலும், நயன்தாராவுடன் ஹாய் என்ற படத்திலும் மற்றும் தண்டட்டி பட இயக்குநருடன் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார். மேலும் கனா காணும் காலங்கள் தொடர் இயக்குநர் கென் ராய் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். கிட்டத்தட்ட 4 படங்களை தனது கைவசத்தில் கவின் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.