Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Kiss Movie : அதிரடி ரொமாண்டிக் கதைக்களம்.. கவினின் ‘கிஸ்’ பட ட்ரெய்லர் இதோ!

Kiss Movie Trailer : தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும், மக்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக இருந்து வருபவர் கவின். இவரின் நடிப்பில் ரொமாண்டிக் காதல் திரைப்படமாக உருவாகியிருப்பது கிஸ் திரைப்படம். இப்படமானது விரைவில் வெளியாகும் நிலையில், தற்போது இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Kiss Movie : அதிரடி ரொமாண்டிக் கதைக்களம்.. கவினின் ‘கிஸ்’ பட ட்ரெய்லர் இதோ!
கிஸ் படத்தின் ட்ரெய்லர்
Barath Murugan
Barath Murugan | Published: 09 Sep 2025 18:21 PM IST

நடிகர் கவின் (Kavin) நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் பிளடி பெக்கர் (Bloody beggar). இந்த படமானது கடந்த 2024 ஆம் ஆண்டு அமரன் திரைப்படத்துடன் ஒன்றாக வெளியானது. இந்த படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரித்திருந்தார். இந்த படத்தை அடுத்து, கவினின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம்தான் கிஸ் (Kiss). இந்த படத்தை பிரபல நடன இயக்குநரான சதீஷ் கிருஷ்ணன் (Sathish Krishnan) இயக்கியுள்ளார். இவர் இப்படத்தின் மூலமாகத்தான் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிகர் கவின் கல்லூரி இளைஞனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ரானி (Preethi Asrani) நடித்துள்ளார். இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட கதையில் தயாராகியுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைக்க, ரோமியோ பிக்ச்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படமானது வரும் 2025 செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  இதை முன்னிட்டு இன்று, 2025 செப்டம்பர் 9 ஆம் தேதியில் கிஸ் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ட்ரெய்லரானது முற்றிலும் மாறுபட்ட விதத்தில் அமைந்திருக்கும் நிலையில், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

இதையும் படிங்க : 3 ஆண்டுகளை நிறைவு செய்தது ஷர்வானந்த் நடிப்பில் வெளியான கணம் படம்

கிஸ் படக்குழு வெளியிட்ட ட்ரெய்லர் பதிவு :

கிஸ் திரைப்படத்தின் நடிகர்கள்

கவினின் இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். இவர் ஏற்கனவே அயோத்தி என்ற படத்தில் தமிழில் நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றியை அடுத்து , இந்த கிஸ் படத்தில் நடித்துள்ளார். மேலும் தற்போது எஸ்.ஜே. சூர்யாவின் கில்லர் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மேலும் இந்த கிஸ் படத்தில் இவர்களுடன் நடிகர்கள், பிரபு, தேவயானி, விடிவி கணேஷ் மற்றும் ராவ் ரமேஷ் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இதையும் படிங்க : எல்லா பெருமையும் லோகேஷ் கனகராஜைதான் சேரும் – நெகிழ்ந்து பேசிய டான்ஸ் மாஸ்டர் சாண்டி

கிஸ் படத்தின் ரிலீஸ் குழப்பம்

இந்த கிஸ் படமானது கடந்த 2025 ஜூலை மாதத்தில் வெளியாகும் என படக்குழு ஆரம்பத்தில் அறிவித்திருந்தது. பின் அந்த மாதத்தில் தொடர்ந்து தமிழ் திரைப்படங்கள் வெளியான காரணத்தால், இப்படத்தின் ரிலீசிற்கு போதுமான திரையரங்குகள் கிடைக்வில்லை என்று கூறப்பட்டது. பின் இப்படமானது இந்த 2025ம் ஆண்டு இறுதிக்கு தள்ளிப்போவதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சமீபத்தில் இப்படமானது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதன்படி, இந்த கிஸ் படமானது வரும் 2025 செப்டம்பர் 19ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாம். இந்த படத்துடன் தமிழில் பல சிறிய பட்ஜெட் படங்களும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.