Kiss Movie: கவினின் கிஸ் பட டிரெய்லர் ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளியான அறிவிப்பு
Kiss Movie Trailer Update : தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து, வெள்ளித் திரைக்கு வந்தவர்களில் கவினும் ஒருவர். இவரின் நடிப்பிலும், டான்ஸ் மாஸ்டர் சதீஷ் கிருஷ்ணனின் இயக்கத்திலும் உருவாகியுள்ள படம்தான் கிஸ். இந்த படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நாயகனாக இருப்பவர் கவின் (Kavin). இவரின் முன்னணி நடிப்பில், தமிழ் சினிமாவில் வெளியீட்டிற்கு தயாராகிவரும் படம்தான் கிஸ் (KIss). இந்த படத்தை டான்ஸ் மாஸ்டர் சதீஷ் கிருஷ்ணன் (Sathish Krishnan) இயக்கியுள்ளார். இப்படத்தின் மூலம் இவர் தமிழில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிகர் கவின் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ரானி (Preethi Asrani) நடித்துள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் அயோத்தி என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது எஸ்.ஜே. சூர்யாவின் (SJ.Suryah) கில்லர் படத்திலும் கதாநாயகியாக நடித்துவருகிறார். இந்த கிஸ் படமானது முற்றிலும் ரொமாண்டிக் படமாக உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இப்படத்தில் கவின் ராஜ் அதிரடி ஆக்ஷ்ன் காட்சிகளிலும் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த படமானது வரும் 2025 செப்டம்பர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதை முன்னிட்டு இப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, கிஸ் படத்தின் டிரெய்லர் வரும் 2025, செப்டம்பர் 9 ஆம் தேதி, மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.




இதையும் படிங்க : ரஜினிகாந்த் – கமல் ஹாசன் ஒன்னா நடிச்சப் படங்கள் எத்தனை தெரியுமா? லிஸ்ட் இதோ
கவினின் கிஸ் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் அறிவிப்பு பதிவு
Hold tight, a flying #KISS is about to land straight on your feed 💋#KissTrailer from Sep 9th, 5 PM ♥️@Kavin_m_0431 @mynameisraahul@dancersatz @preethioffl @dop_harish @SureshChandraa @peterheinoffl#MohanaMahendiran @editorrcpranav @gopiprasannaa @MythriRelease @Hamsinient… pic.twitter.com/4bnG5dty01
— raahul (@mynameisraahul) September 8, 2025
கவின் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானியின் இப்படத்தில், அவர்களுடன் நடிகர்கள் தேவயானி, பிரபு, விடிவி கணேஷ், ஆர்.ஜே.விஜய் என பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் என்ற நிறுவனமானது தயாரிக்க, ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார்.
இதையும் படிங்க : கல்லூரி படத்தில் தமன்னாவை நாயகியாக தேர்வு செய்தது இப்படிதான் – இயக்குநர் பாலாஜி சக்திவேல் ஓபன் டாக்!
இவரின் இசையமைப்பில், இப்படத்தின் முதல் பாடலை அனிருத் ரவிச்சந்தர் பாடியிருந்தார். “திருடி” என்ற இப்பாடல் தற்போது வரை இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இந்த கிஸ் படமானது வரும் 2025 செப்டம்பர் 19ம் தேதியில் தமிழ் மொழியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கவினின் புதிய திரைப்படங்கள்
நடிகர் கவின் கிஸ் படத்தை தொடர்ந்து, இயக்குநர் வெற்றிமாறனின் தயாரிப்பில் மாஸ்க் என்ற படத்தில் நடிக்கிறார். இதில் அவருடன் நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ளார். இப்படத்தை அடுத்து தண்டட்டி பட இயக்குநரின் இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்துள்ளார்.
இப்படத்திலும் பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனமானது தயாரித்து வருகிறது. மேலும் அறிமுக இயக்குநர் கென் ராய் இயக்கத்தில், ப்ரியங்கா மோகனுடன் புதிய படத்திலும் கவின் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.