Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ரஜினிகாந்த் – கமல் ஹாசன் ஒன்னா நடிச்சப் படங்கள் எத்தனை தெரியுமா? லிஸ்ட் இதோ

Kamal Haasan and Rajinikanth: நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வயதில் கமல் ஹாசனைவிட மூத்தவர் என்றாலும் சினிமாவில் கமல் ஹாசன் தான் நடிகர் ரஜினிகாந்திற்கு சீனியர். ரஜினி நடிகராக அறிமுகம் ஆகும் முன்பே கமல் ஹாசன் பலப் படங்களில் நாயகனாக நடிக்கத் தொடங்கிவிட்டார்.

ரஜினிகாந்த் – கமல் ஹாசன் ஒன்னா நடிச்சப் படங்கள் எத்தனை தெரியுமா? லிஸ்ட் இதோ
ரஜினிகாந்த் - கமல் ஹாசன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 08 Sep 2025 13:48 PM IST

கோலிவுட் சினிமாவில் பேசும் படங்கள் வெளியாக தொடங்கியதில் இருந்தே நடிகர்களிடையே போட்டி இருக்கோ இல்லையோ ரசிகர்களிடையே நல்லப் போட்டி இருக்கும். எம்ஜிஆர் – சிவாஜி தொடங்கி தற்போது அஜித் – விஜய் என ரசிகர்கள் இன்னும் போட்டிப் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அதன்படி எம்ஜிஆர் – சிவாஜி போட்டிக்கு பிறகு கோலிவுட் சினிமாவில் அடுத்ததாக போட்டிப் போட்டது ரஜினிகாந்த் – கமல் ஹாசன் ரசிகர்கள் தான். சினிமாவில் ரஜினிகாந்தின் சீனியராக இருப்பவர் கமல் ஹாசன். அதன்படி கமல் ஹாசன் நாயகனாக நடித்த அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார். 1975-ம் ஆண்டு இந்தப் படம் வெளியான போது யாரும் யோசித்துக்கூட பார்த்துஇருக்க மாட்டார்கள் இவர்கள் இருவருக்கும் இடையே சினிமாவில் மிகப்பெரிய போட்டி ஒன்று இருக்கும் என்பது.

தொடர்ந்து 1975-ம் ஆண்டு முதல் 1979-ம் ஆண்டு வரை கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து பலப் படங்களில் நடித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நாயகனாகவே நடிக்கத் தொடங்கினார். பின்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல் ஹாசன் இருவரும் போட்டிப் போட்டு நடிக்க தொடங்கினர். இவர்கள் போட்டிப் போடவில்லை என்றாலும் இவர்களது ரசிகர்கள் தற்போதுவரை போட்டிப்போட்டுக்கொண்டே இருக்கின்றனர்.

அபூர்வ ராகங்கள் முதல் கெராஃப்டார் வரை படங்களின் லிஸ்ட் இதோ:

அதன்படி அபூர்வ ராகங்கள் படத்தின் தொடங்கி அடுத்தடுத்து தெலுங்கு சினிமாவில் அந்துலேனி கதா, மூன்று முடிச்சு, அவர்கள், பதினாரு வயதினிலே, ஆடு புலி ஆட்டம், இளமை ஊஞ்சல் ஆடுகிறது அதே படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வயசு பிலிச்சிண்டி என்ற பெயரில் வெளியானது. இதிலும் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் இருவரும் இணைந்து நடித்து இருந்தனர்.

தொடர்ந்து தப்புத் தாளங்கள், அவள் அப்படிதான், அலாவுதினும் அப்புத விளக்கும், நினைத்தாலே இனிக்கும், தாயில்லாமல் நான் இல்லை, நட்சத்திரம், சரணம் ஐயப்பா, தில்லு முல்லு, உருவங்கள் மாறலாம் அடுத்து இறுதியாக கடந்த 1985-ம் ஆண்டு கெராஃப்டார் என்ற இந்திப் படத்தில் ஒன்றாக இணைந்து நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தகது. அதன்படி இவர்கள் இருவரும் 18 படங்கள் ஒன்றாக நடித்துள்ளனர்.

மீண்டும் இணையும் ரஜினிகாந்த் – கமல் ஹாசன் கூட்டணி:

சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் இணைந்து நடிக்க உள்ளதகா அதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குகிறார் என்றும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வந்தது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் நடைப்பெற்ற சைமா விருது வழங்கும் விழாவில் நடிகர் கமல் ஹாசன் கலந்துகொண்டார். அப்போது இந்த கூட்டணி குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தரமான சம்பவம் காத்திருக்கு என்று நடிகர் கமல் ஹாசன் தெரிவித்து இருந்தார். இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Also Read… அனிருத்தின் வளர்ச்சியைப் பார்த்தா பிரமிப்பா இருக்கு – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்

இணையத்தில் வைரலாகும் நடிகர் கமல் ஹாசனின் வீடியோ:

Also Read… அந்த படத்திற்கு நான் சம்பளமே வாங்கவில்லை – இயக்குநர் வெற்றிமாறன்