Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vilaayath Budha : அதிரடி ஆக்ஷ்ன் தெறிக்குதே.. பிருத்விராஜின் ‘விலாயத் புத்தா’ பட டீசர்!

Vilaayath Budha Teaser : மலையாள சினிமாவில் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநராக இருந்து வருபவர் பிருத்விராஜ் சுகுமாரன். இவரின் நடிப்பில் உருவாகிவரும் அதிரடி திரைப்படம்தான் விலாயத் புத்தா. இந்த படத்தின் முதல் டீசர் வெளியாகி இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Vilaayath Budha : அதிரடி ஆக்ஷ்ன் தெறிக்குதே.. பிருத்விராஜின் ‘விலாயத் புத்தா’ பட டீசர்!
விலாயத் புத்தா பட டீசர்
Barath Murugan
Barath Murugan | Published: 07 Sep 2025 15:15 PM IST

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் பிருத்விராஜ் சுகுமாரன் (Prithviraj Sukumaran). இவரின் இயக்கத்தில் இறுதியாக எல் 2: எம்புரான் (L2: Empuraan) திரைப்படமானது வெளியாகியிருந்தது. இந்த படத்தில் நடிகர் மோகன்லால் முன்னணி நாயகனாக நடித்து அசத்தியிருந்தார். மேலும் பிருத்விராஜும் இப்படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இப்படமானது வெளியாகி சுமார் ரூ 250 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இந்த படத்தை தொடர்ந்து, இயக்குநர் ஜெயன் நம்பியார் (Jayan Nambiar) இயக்கத்தில், பிருத்விராஜ் நடித்திருக்கும் படம்தான் விலாயத் புத்தா (Vilaayath Budha). இந்த படமானது அதிரடி ஆக்ஷ்ன் மற்றும் கிராமம் சார்ந்த கதைக்களத்துடன் இப்படமானது உருவாகிவருகிறது.

இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், படமானது இறுதிக்கட்ட வேலைகளில் இருந்து வருகிறது. இந்நிலையில், விலாயத் புத்தா படத்தின் டீசர் வெளியாகியிருக்கும் நிலையில் , ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த டீசரில் நடிகர் பிருத்விராஜ், “புஷ்பா இன்டர்நெஷனல், குட்டி வீரப்பன் மற்றும் நான் லோக்கல்” என தமிழ், தெலுங்கு போன்ற படங்களின் வசனங்கள் உள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது.

இதையும் படிங்க : பிளாக்மெயில் படம் இப்படித்தான் இருக்கும்.. முதல் விமர்சனம் கொடுத்த ஜி.வி. பிரகாஷ்!

நடிகர் ரிஷப் ஷெட்டி வெளியிட்ட விலாயத் புத்தா பட டீசர் பதிவு :

விலாயத் புத்தா படத்தின் டீசரை பார்த்த கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி, அதை பாராட்டியுள்ளார். அது தொடர்பான எக்ஸ் பதிவையும் அவர் வெளியிட்டுள்ளார் . இந்த விலாயத் புத்தா படத்தை பார்ப்பதற்கு ஆர்வமாக உள்ளேன் என்றும் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இதையும் படிங்க : மக்களை ஈர்க்கும் படம்.. மதராஸி படத்துக்கு ஷங்கர் வாழ்த்து!

விலாயத் புத்தா திரைப்படம் :

நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை, இயக்குநர் ஜெயன் நம்பியார் இயக்கியுளளார். மேலும் இப்படத்தை பிரபல எழுத்தாளர் இந்துகோபன் எழுதியிருக்கிறார். இந்த படமானது சந்தனக் கடத்தல் தொடர்பான கதைக்களத்தில் உருவாகியுள்ளதாம். இந்த படத்தில் டோவினோ தாமஸின், நரிவேட்டை படத்தில் நடித்திருந்த நடிகை பிரியம்வதா கிருஷ்ணன், கதாநாயகியாக இப்படத்திலும் நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு மலையாள பிரபல இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். இந்த படமானது சந்தன மரகடத்தல், காதல், ஆக்ஷ்ன் மற்றும் விறுவிறுப்பான கதையில் தயாராகியுள்ளது. இப்படமானது போஸ்ட் விப்ரோடக்ஷன் பணிகளில் இருக்கும் நிலையில், ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் அறிவிக்கப்படுவதாக விலாயத் புத்தா பட டீசரில் குறிப்பிடப்பட்டிருந்தது.