Dulquer Salmaan : கல்யாணி பிரியதர்ஷனை தவிர யாரும் அந்த வேடத்தில் நடிக்கமுடியாது – துல்கர் சல்மான் பேச்சு!
Dulquer Salmaan About Kalyani Priyadarshan Performance : மலையாள சினிமாவில் கடந்த 2025, ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் வெளியாகி ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்த படம்தான் லோகா. இப்படத்தின் வெற்றி நிகழ்ச்சியில் பேசிய துல்கர் சல்மான், கல்யாணி பிரியதர்ஷனை பாராட்டியுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் கல்யாணி பிரியதர்ஷன் (Kalyani Priyadarshan). இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழி படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் கடந்த 2025, ஆகஸ்ட் 28ம் தேதியில் வெளியான திரைப்படம்தான் லோகா சாப்டர் 1 : சந்திரா (Lokah Chapter 1: Chandra). இந்த படத்தில் மலையாள இயக்குநர் டோமினிக் அருண் இயக்கியிருந்தார். மேலும் நடிகர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan) வேஃபரர் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரித்திருந்தார். இந்த லோகா திரைப்படமானது அதிரடி சூப்பர் வுமன் கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. தென்னிந்திய சினிமாவில் சூப்பர் வுமன் கதைக்களத்தை வைத்து வெளியான முதல் படமாகவும் இது கருதப்படுகிறது. இந்த படமானது வெளியாக ஒரு வாரத்தை கடந்திருக்கும் நிலையில், இதுவரை சுமார் ரூ 101 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாம்.
இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் சமீபத்தில் இப்படத்தின் நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்தது. அதில் பேசிய நடிகரும், தயாரிப்பளாருமான துல்கர் சல்மான், லோகா படத்தின் பட்ஜெட் குறித்தும் மற்றும் நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் உழைப்பு பற்றியும் பேசியிருந்தார். “இந்த லோகா படத்தில் கல்யாணி பிரியதர்ஷனை தவிர மற்ற எந்த நடிகைகளும் பொருந்தமாட்டார்கள்” என்று நினைக்கிறேன் என துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க : தனுஷிற்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை! அட இந்த படத்திலா
கல்யாணி பிரியதர்ஷனை பாராட்டி பேசிய துல்கர் சல்மான் :
அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் துல்கர் சல்மான், பல்வேறு விஷங்களை பகிர்ந்திருந்தார். தொடர்ந்து பேசிய அவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷனை பாராட்டியிருந்தார். அந்த நிகழ்ச்சியில் துல்கர் சல்மான், “லோகா படத்திற்கு கல்யாணி பிரியதர்ஷனை தவிர சந்திரா கதாபாத்திரத்திற்கு, யாரும் பொருந்தமாட்டார்கள் என்று நினைக்கிறேன். லோகா படத்திற்காக அவர் போட்டிருக்கும் உழைப்புதான் இந்த படத்திற்கான வரவேற்பு. இந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாவதற்கு முன்னே அவர் உடற்பயிற்சியை தொடங்கிவிட்டார்.
இதையும் படிங்க : மதராஸி படம்.. குழந்தைகளுக்காக பல காட்சிகள் மாற்றம்!
படக்குழுக்கள் யாருமே அவரிடம் பயிற்சி செய்யவேண்டும் என கூறவில்லை, அவராக முன்வந்து, நான் சூப்பர் ஹீரோ சார் அதனால் இதை செய்கிறேன்என தன்மையுடன் கல்யாணி பிரியதர்ஷன்தான் செய்தார். இன்றைக்கு அவரை மீம்ஸ் முதல் ரீல்ஸ் வரை அவரை பாராட்டிவருவது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது” எனறு நடிகர் துல்கர் சல்மான் பேசியுள்ளார்.
கல்யாணி பிரியதர்ஷன் பற்றி துல்கர் சல்மான் பேசிய வீடியோ :
“#Lokah: I think No one would be fit for Chandra character other than #KalyaniPriyadharshan🔥. She have put sincere efforts for Physical training & Look without even we told her⚡. Today’s memes & appreciating her brings so much joy😍♥️”
– #DulquerSalmaanpic.twitter.com/3K3ppVCS7p— AmuthaBharathi (@CinemaWithAB) September 3, 2025
இந்த லோகா படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் வெளியாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த லோகா படமானது ரசிகர்கள் மத்தியில் நல்ல பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த ஒரு படமானது ஒட்டுமொத்த இந்தியாவையும் மலையாள சினிமாவை திரும்பி பார்க்கவைத்திருக்கிறது என்றே கூறலாம்.