Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

AR Murugadoss: மதராஸி படம்.. குழந்தைகளுக்காக பல காட்சிகள் மாற்றம்!

AR Murugadoss About Madharaasi Movie : தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் ஏ.ஆர்.முருகதாஸ். இவரின் இயக்கத்தில் மற்றும் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியாக காத்திருக்கும் படம் மதராஸி. இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் குழந்தை ரசிகர்களுக்காக செய்த விஷயம் குறித்து முருகதாஸ் பேசியுள்ளார்.

AR Murugadoss: மதராஸி படம்.. குழந்தைகளுக்காக பல காட்சிகள் மாற்றம்!
ஏ.ஆர்.முருகதாஸ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 04 Sep 2025 11:07 AM

நடிகர் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) 23வது திரைப்படமான வெளியாக காத்திருப்பது மதராஸி (Madharaasi). இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) இணைந்து நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்திருக்கும் 2வது படமாகும். இந்த படத்தை முன்னணி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் (AR. Murugadoss) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் தமிழில் இறுதியாக கடந்த 2020ம் ஆண்டு தர்பார் என்ற படமானது வெளியானது. அதில் ரஜினிகாந்த் நாயகனாக நடித்திருந்தார். அதை அடுத்ததாக சுமார் 5 வருடங்களுக்கு பின் இவரின் இயக்கத்தில் இந்த மதராஸி படமானது வெளியாக காத்திருக்கிறது. சிவகார்த்திகேயனுக்கு பொதுவாகவே குழந்தைகள் ரசிகர்கள் (Sivakarthikeyans child fans) அதிகம்.

அந்த வகையில் அவரின் படங்களில் பெரிதும் நெருக்கமான காட்சிகள் மற்றும் ரத்தம் தெறிக்கும் சண்டை காட்சிகள் எதுவும் இடம்பெறாது. அந்த வகையில் இந்த மதராஸி படத்தில் சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்காக சில காட்சிகள் குறைக்கப்பட்டதை பற்றி இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : லோகா மலையாள சினிமாவில் எங்களுக்கு பெரிய பட்ஜெட் படம் – நடிகர் துல்கர் சல்மான்

சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்காக மதராஸி படத்தில் சண்டை காட்சிகள் குறைப்பு பற்றி ஏ.ஆர். முருகதாஸ் பேச்சு:

சமீபத்தில் பேசிய நேர்காணலில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ” சினிமாவில் சிவகார்த்திகேயனின் இதயம் கவர்ந்த ரசிகர்கள் குழந்தைகள் மற்றும் பெண் ரசிகர்கள் என்று தெரியும். நான் படத்திற்கு அடல்ட் மட்டும்தான் பார்க்கவேண்டும் என்று நினைக்கவில்லை. இப்படமானது மிகவும் வைலண்டான படம் எல்லாம் கிடையாது. மதராஸி படத்தின் ட்ரெய்லருக்கு சென்சார் குழு “ஏ” தரச் சான்றிதழைதான் கொடுத்திருந்தனர், ஆனால் படத்திற்கு யு/ஏ தரச் சான்றிதழ்தான் வேண்டும் என்று நான் முடிவோடுதான் இருந்தேன்.

இதையும் படிங்க : அனிருத்தின் வளர்ச்சியைப் பார்த்தா பிரமிப்பா இருக்கு – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்

யு/ஏ சான்றிதலுக்காக சென்சார் குழு மாற்ற சொன்ன அனைத்து விஷயங்களையும் குறைத்திருக்கிறோம். படத்தில் ரத்தம் போன்ற காட்சிகள் வாராமல் குறைத்திருக்கிறோம், படத்தை பார்க்கும்போது ஆக்ஷ்ன் காட்சிகள் இருக்கும், ஆனால் குழந்தைகள் பார்க்கமுடியாத அளவிற்கு உள்ளது நான் எடுக்கவில்லை என்று இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் ஓபனாக பேசியுள்ளார். இது குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மதராஸி படக்குழு வெளியிட்ட சென்சார் குறித்த பதிவு :

சிவகார்த்திகேயனின் படத்திற்கு குவியும் எதிர்பார்ப்பு :

சிவகார்த்திகேயனின் இந்த மதராஸி படமானது நாளை 2025 செப்டம்பர் 5ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் முழுவதுமாக ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மதராஸி படமானது, தமிழ் உட்பட மொத்தம் 5 மொழிகளில் வெளியாகிறது. அமரன் படத்திற்கு பின் சிவகார்த்திகேயனுக்கு மதராஸி வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.