மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், உலகின் மிகப்பெரிய சுற்றுலா நகரங்களில் ஒன்றான துபாய் தற்போது வெறிச்சோடிய நகரமாக மாறி வருகிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் தாக்குதல்கள் மற்றும் போர் பதற்றம் காரணமாக, துபாயில் வசித்துவரும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நகரை விட்டு வெளியேறி வருவதாக கூறப்படுகிறது. ஒரு காலத்தில் உலகம் முழுவதிலிருந்தும் வரும் பில்லியனர்கள், பிரபலங்கள் மற்றும் சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர்களால் நிரம்பி வழிந்த துபாய் கடற்கரைகள் தற்போது வெறிச்சோடியுள்ளன.