Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Madharaasi : ரிலீசிற்கு தயாராகும் மதராஸி.. ரசிகர்களை கவரும் ‘தங்கப்பூவே’ லிரிக்கல் பாடல்!

Thangapoovey Lyrical Video Song : நடிகர் சிவகார்த்திகேயனின் முன்னணி நடிப்பில் தயாராகியிருக்கும் படம் மதராஸி. இந்த படத்தை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இப்படமானது விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்திலிருந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவரும் தங்கப்பூவே என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.

Madharaasi : ரிலீசிற்கு தயாராகும் மதராஸி.. ரசிகர்களை கவரும் ‘தங்கப்பூவே’ லிரிக்கல் பாடல்!
தங்கப்பூவே லிரிக்கல் பாடல்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 02 Sep 2025 16:22 PM

தமிழ் சினிமாவில் வரும் 2025ம் செப்டம்பர் 5ம் தேதியில் வெளியாக காத்திருக்கும் திரைப்படம் மதராஸி (Madharaasi). இந்த படத்தை தமிழ் பிரபல இயக்குநரான ஏ.ஆர். முருகதாஸ் (AR.Murugadoss) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் (Rajinikanth) தர்பார் (Darbar) படம் கடைசியாக வெளியான நிலையில், 5 ஆண்டுகளுக்குப் பின் இந்த மதராஸி படமானது வெளியாகவுள்ளது. இந்த படத்தில் முன்னணி நாயகனாக நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடித்துள்ளார். இந்த படமானது சிவகார்த்திகேயனின் 23வது படமாக கடந்த 2023 ஆம் ஆண்டு இறுதியில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த மதராஸி படமானது அதிரடி ஆக்ஷ்ன் மற்றும் காதல் கதைக்களம் சார்ந்த படமாக உருவாகியுள்ளது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ருக்மிணி வசந்த் (Rukmini vasanth) நடித்திருக்கிறார். இந்த படமானது வெளியீட்டிற்கு தயாராகிவரும் நிலையில், படத்தின் பாடல்கள் முழுவதும் ஆல்பமாக வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், அதில் “தங்கப்பூவே” (Thangapoovey) என்ற பாடல் ரசிகர்கள் மத்திய வைரலாகி வந்த நிலையில், தற்போது அந்த பாடலினை லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : வாடிவாசல் பட ஸ்கிரிப்டை கேட்டாரா சூர்யா? வெற்றிமாறன் பகிர்ந்த விஷயம்!

மதராஸி படக்குழு வெளியிட்ட தங்கப்பூவே லிரிக்கல் வீடியோ பாடல் பதிவு :

மதராஸி படத்தின் டிக்கெட் புக்கிங்

சிவகார்த்திகேயனின் இந்த மதராஸி படமானது வரும் 2025, செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படமாது தமிழில் மட்டுமில்லாமல், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் வெளியாகவுள்ளதாம்.

இதையும் படிங்க : கோலிவுட் சினிமாவில் வரிசைக்கட்டும் பார்ட் 2 படங்களின் லிஸ்ட் இதோ!

இந்த படத்தின் வெளிநாடு டிக்கெட் புக்கிங் கடந்த வாரத்தில் தொடங்கிய நிலையில், மதராஸி படத்தின் தமிழக டிக்கெட் ப்ரீ புக்கிங் கடந்த 2025, செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இந்த டிக்கெட் புக்கிங்கில் தற்போதுவரை, சுமார் ரூ 1.7 கோடிகளுக்கு மேல் இப்படமானது வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மதராஸி படத்தின் மீது எதிர்பார்ப்பு

இந்த மதராஸி படமானது இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தமிழில் சுமார் 5 வருடங்களுக்கு பின் வெளியாகவுள்ளது. இவரின் இயக்கத்தில் இறுதியாக தமிழில் வெளியான தர்பார் படமானது போதிய வரவேற்பை பெறவில்லை.

அதை தொடர்ந்து வெளியாகும் இந்த மதராஸி படமானது முழுவதும் ஆக்ஷன் மற்றும் காதல் கதைக்களம் கொண்ட படமாக உருவாகியிருகிறது. இந்நிலையில், இந்த படம் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸிற்கு நல்ல வரவேற்பை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.