Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வாடிவாசல் பட ஸ்கிரிப்டை கேட்டாரா சூர்யா? வெற்றிமாறன் பகிர்ந்த விஷயம்!

Vetrmaaran About Scriptless filmmaking : சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய வெற்றிமாறன், தனது படத்தின்போது நடிகர்களிடம் ஸ்கிரிப்ட் பேப்பரை கொடுக்கமாட்டேன் என கூறியுள்ளார். இதுதான் வாடிவாசல் படத்தின் தாமதத்திற்கு காரணமா ? என கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து விவரமாக பார்க்கலாம்.

வாடிவாசல் பட ஸ்கிரிப்டை கேட்டாரா சூர்யா? வெற்றிமாறன் பகிர்ந்த விஷயம்!
வெற்றிமாறன் மற்றும் சூர்யாImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 02 Sep 2025 15:31 PM

இயக்குநர் வெற்றிமாறனின் (Vetrimaaran) இயக்கத்தில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து, மாறுபட்ட கதைக்களத்தில் படங்கள் உருவாகிவருகிறது. அந்த வகையில் இவர் தற்போது நடிகர் சிலம்பரசனை (Silambarasan) வைத்து புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் புரோமோ வீடியோ ஷூட்டிங் சமீபத்தில் நடைபெற்றிருந்த நிலையில், படப்பிடிப்பு தள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியிருந்தது. மேலும் இதுகுறித்து இயக்குநர் வெற்றிமாறனுக்கு நேர்காணல் ஒன்றில், சிலம்பரசனுடன் புதிய படத்தில் இணைந்திருப்பதாக உறுதிபடுத்தியிருந்தார். மேலும் இப்படத்தின் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் விடுதலை பார்ட் 2 படத்தை தொடர்ந்து வெற்றிமாறன், சூர்யாவுடன் (Suriya) வாடிவாசல் (Vaadivaasal) படத்தில் இணையவுள்ளதாக கூறப்பட்டது.

பின் அந்த படமானது சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டிருக்கும் நிலையில், சூர்யாவின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய வெற்றிமாறன், “தனது படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு ஒருபோதும்  ஸ்கிரிப்ட் பேப்பரை கொடுக்கமாட்டேன்” என கூறியுள்ளார். வாடிவாசல் படமும் தள்ளிபோவதற்கு இதுவும் ஒரு காரணம் என பேசப்படுகிறது.

இதையும் படிங்க : அப்படிலாம் ரசிகர்கள பிடிச்சுட முடியாது – நடிகர் சிவகார்த்திகேயன் ஓபன் டாக்

நடிகர்களுக்கு ஸ்கிரிப்ட் கொடுப்பது பற்றி வெற்றிமாறன் பேச்சு

அந்த நேர்காணலில் பேசிய வெற்றிமாறன், “எனது படங்களில் நான் நடிகர்களுக்கு ஸ்கிரிப்ட் கையில் கொடுக்க மாட்டேன். ஏனென்றால் நான் அதை எழுத மாட்டேன். நடிகர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு வர வேண்டும், அவர்களுக்கு என்ன படப்பிடிப்பு நடக்கப் போகிறது என்று கூட தெரியாது.

இதையும் படிங்க : அஜித்தும் ரஜினிகாந்த் ரசிகரா? அவரின் ரிங்க்டோன் என்ன தெரியுமா?

இதனால் சில நடிகர்கள் கவலைப்படுவார்கள்.  என்னுடன் வேலை செய்யமாட்டார்கள்” என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

வெற்றிமாறன் பேசிய வீடியோ

வாடிவாசல் படம் தள்ளிப்போக இதுதான் காரணமா?

நடிகர் சூர்யாவின் முன்னணி நடிப்பில் மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படமானது உருவாகவுள்ளதாக கடந்த 2021 ஆம் ஆண்டில் அறிவிப்புகள் வெளியானது. இதைத்தொடர்ந்து சில காரணங்களால் இப்படத்தின் ஷூட்டிங் தள்ளிக்கொண்டே போனது.  சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வந்த தகவலின்படி, வாடிவாசல் படத்தின் ஸ்கிரிப்ட் பேப்பரை இயக்குநர் வெற்றிமாறன், சூர்யாவிற்கு கொடுக்காததால் இப்படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போவதாகவும் கூறப்பட்டது.