அப்போ கைதி 2 படத்திற்கு சாம் சி.எஸ் இசை இல்லையா? லோகேஷ் கனகராஜ் சொன்ன விசயம்
Director Lokesh Kanagaraj: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி படத்தில் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்து இருந்தார். இந்த நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்று கைதி 2 படத்தில் அவர் இசையமைப்பாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ம் தேதி வெளியான படம் கைதி.இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் நரேன், அர்ஜுன் தாஸ், ஜார்ஜ் மரியன், ஹரிஷ் உத்தமன், தீனா, பேபி மோனிகா, ரமணா, அம்ஜத், கண்ணா ரவி, ஹரீஷ் பெராடி, அருண் அலெக்சாண்டர், வத்சன் சக்ரவர்த்தி, உதயராஜ், கிஷோர் ராஜ்குமார், லல்லு, தீப்தி, கிருஷ்ணமூர்த்தி, மாளவிகா அவினாஷ், சேத்தன், ஆர்.என்.ஆர்.மனோகர், அகஸ்டின் அஜு என பலர் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்தை ட்ரீம் வாரியஸ் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு, திருப்பூர் விவேக் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து இருந்தனர்.
ஒரு இரவு நேரத்தில் சிட்டியில் நடைபெற இருக்கும் பெரியை க்ரைமை ஜெயிலில் இருந்து வெளியே வந்த கைதி கார்த்தியுடன் இணைந்து காவல்துறை அதிகாரி நரேன் எப்படி அந்த க்ரைமை தடுக்கிறார் என்பதே படத்தின் கதி. முழுக்க முழுக்க இரவு நேரத்தில் இருக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைத்து இருந்தார். இந்த இசை படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய உருதுணையாக இருந்தது குரிப்பிடத்தக்கது.




என் படங்கள் அனைத்திற்கும் இனி அனிருத் தான் இசையமைப்பார்:
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இறுதியாக வெளியான கூலி படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருந்தார். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இனி தான் இயக்கும் படங்களுக்கு அனிருத் தான் இசையமைப்பார் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் கைதி முதல் பாகத்திற்கு இசையமைத்த சாம் சிஎஸ் கைதி 2-ம் பாகத்திற்கு இசையமைக்க மாட்டார் என்று இணையத்தில் தகவல்கள் வைரலாகி வருகின்றது. இது சாம் சிஎஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read… இணையத்தில் வைரலாகும் பிக்பாஸ் அர்ச்சனா – அருண் திருமண நிச்சய செய்தி!
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#LokeshKanagaraj: “In the future, I will not do any film without Anirudh🎶. In case if Anirudh quits the industry, I can think about other options”
So #Kaithi2 music is going to be done by Anirudh, not SamCS👀 pic.twitter.com/MoZyHLgH7u
— AmuthaBharathi (@CinemaWithAB) September 1, 2025
Also Read… ‘நீங்க நல்லவர்தான்’ – வார்த்தையை விட்ட தொகுப்பாளர்.. கடுப்பாகி பதிலளித்த நடிகர் யோகிபாபு