Ghaati : ஆக்ஷன் நாயகியாக அனுஷ்கா.. ‘காதி’ படத்தின் சென்சார் அப்டேட்!
Anushka Shettys Ghaati Movie Update : நடிகை அனுஷ்கா ஷெட்டி மற்றும் விக்ரம் பிரபுவின் முன்னணி நடிப்பில் தயாராகியிருக்கும் படம் காதி. இப்படமானது வரும் 2025, செப்டம்பர் 5 ஆம் தேதியில் வெளியாகிறது. இந்த படத்தின் சென்சார் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் அதிரடி நடிகையாக தொடர்ந்து படங்களில் நடித்து வருபவர் அனுஷ்கா ஷெட்டி (Anushka Shetty). இவரின் முன்னணி நடிப்பில் பல படங்ககள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இந்த 2025 ஆம் ஆண்டு வெளியாகி காத்திருக்கும் படம் காதி (Ghaati). தெலுங்கு இயக்குநர் கிரிஷ் ஜாகர்லமுடி (Krish Jagarlamudi) இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் காதி. இதில் அனுஷ்கா ஷெட்டி லீட் கதாபாத்திரத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக விக்ரம் பிரபு நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் நடிகர் விக்ரம் பிரபு (Vikram Prabhu) தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமாகியிருகிறார். இந்த படமானது வரும் 2025, செப்டம்பர் 5ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ரிலீசிற்கு இன்னும் சில நாட்கள் மட்டும் இருக்கும் நிலையில், தற்போது இப்படத்திலிருந்து சிறப்பான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
அது என்னவென்றால், இந்த காதி படத்திற்கு சென்சார் குழு “யு/ஏ” தரச் சான்றிதழை வழங்கியுள்ளது. அதன்படி இந்தப் படத்தை பெற்றோர்கள் துணையுடன் குழந்தைகள் பார்க்கலாம். தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : லவ் மேரேஜ் முதல் கிங்டம் வரை.. இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள்!
காதி படக்குழு வெளியிட்ட சென்சார் விவரம் :
SHEELAVATHI will have a LEGENDARY REIGN over the box office ❤🔥
It is U/A for #Ghaati 🔥
Get ready for a riveting tale on the big screens 💥💥GRAND RELEASE WORLDWIDE ON 5th SEPTEMBER 2025
⭐ing ‘The Queen’ @MsAnushkaShetty & @iamVikramPrabhu
🎥 Directed by the phenomenal… pic.twitter.com/WGlgg9WEQe— UV Creations (@UV_Creations) August 29, 2025
இந்த காதி படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் நாகவெல்லி வித்யா சாகர் இசையமைத்திருகிறார். இவரின் இசையமைப்பில் இந்த காதி படத்தின் இரு பாடல்கள் இதுவரை வெளியாகியிருக்கிறது. இந்த காதி படமானது மிக பிரம்மாண்டமாக கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இதில் நடிகை அனுஷ்கா ஷெட்டி மற்றும் விக்ரம் பிரபு போதை பொருட்களை கடத்தும் தொழிலாளர்கள் வேடத்தில் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க : நடிகை சாய் தன்ஷிகாவை விட நடிகர் விஷால் இத்தனை வயது மூத்தவரா?
மேலும் இப்படத்தின் நடிகை அனுஷ்கா ஷெட்டியும் அதிரடி ஆக்ஷ்ன் வேடத்தில் நடித்துள்ளார். இப்படமானது ஆரம்பத்தில் கடந்த ஜூலை 11 ஆம் தேதியில் வெளியாகவிருந்தது, பின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நிறைவடையாத காரணத்தால் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில் வரும் 2025, செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மதராஸி படத்துடன் மோதும் காதி :
சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படமானது வரும் 2025 செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்துடன் தான் அனுஷ்காவின் காதி படமும் வெளியாகிறது. இந்த இரு படங்களுக்கும் இடையே நிச்சயம் பாக்ஸ் ஆபிஸில் கடும் போட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது.