மதராசி படத்திற்கு சென்சார் போர்ட் கொடுத்த சான்றிதழ் என்ன? படக்குழு வெளியிட்ட மாஸ் அப்டேட்!
Madharaasi Movie Update: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் மதராஸி. இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக களம் இறங்கியுள்ளது. இந்த நிலையில் படத்தின் தணிக்கை சான்றிதழ் குறித்த அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் (Actor Sivakarthikeyan) இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் தனது 23-வது படமான மதராஸி படத்திற்காக கூட்டணி வைத்தார். நடிகர் சிவகார்த்திகேயன் தனது 20-வது படமான மாவீரன் படத்தில் நடித்து கொண்டிருந்த போதே இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உடனான கூட்டணி அறிவிப்பு வெளியாகிவிட்டது. சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பே இந்த கூட்டணி இணைந்த நிலையில் தற்போது படத்தின் வெளியீடு நெருங்கியுள்ளது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்தி சினிமாவில் நடிகர் சல்மான் கானின் நடிப்பில் வெளியான சிக்கந்தர் படத்தின் பணிகளில் பிசியாக இருந்ததால் இந்தப் படத்தின் பணிகள் முடிவடைய தாமதம் ஆனது. சிக்கந்தர் படத்தின் வெளியீட்டிற்கு பிறகு முழு நேரமும் சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தில் கவனம் செலுத்தி வந்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் பணிகளை முடித்துவிட்டு தற்போது வெளியீட்டு பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைப்பெற்றது. இதில் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு பேசினர். அதில் படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன், படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் பேசியது ரசிகர்களிடையே வைரலானது குறிப்பிடத்தக்கது.
மதராஸி படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வங்கிய தணிக்கை குழு… ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?
மதராஸி படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் படத்தின் தணிக்கை விவரம் குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் ஒரு எக்ஸ் தள பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் படத்திற்கு யு/ஏ சான்றிதழை தனிக்கை குழு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி படம் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் ஓடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பேட்டி ஒன்றில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசுகையில் படத்தின் நீளம் அதிகமாக இருப்பது குறித்து பேசியிருந்தார். அதில் தற்போது மக்கள் ஒரு சீரிஸ் நன்றாக இருந்தால் அதனை பல மணி நேரம் உக்காந்து பார்க்கிறார்கள். அதற்கு பிஞ்ச் வாச்சிங் என்று அழைப்பார்கள். அதனால் படம் நன்றாக இருந்தால் எத்தன மணி நேரம் இருந்தாலும் அது நன்றாக இருந்தால் மக்கள் பார்த்து ரசிப்பார்கள் என்று அவர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read… தீமைதான் வெல்லும் என்ன நினைத்தாலும் – 10 ஆண்டுகளை நிறைவு செய்தது ரவி மோகனின் தனி ஒருவன் படம்
மதராஸி படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
The much anticipated #Madharaasi certified with U/A ❤🔥
All set to entertain and enthrall you in theatres from September 5th 💥💥#MadharaasiTrailer
▶️ https://t.co/Oe6jr6pkR4#DilMadharaasi#MadharaasiFromSep5@SriLakshmiMovie @Siva_Kartikeyan @ARMurugadoss @anirudhofficial… pic.twitter.com/pOm4qJZP8N— Sri Lakshmi Movies (@SriLakshmiMovie) August 29, 2025
Also Read… ரீ ரிலீஸாகும் மாதவனின் சூப்பர் ஹிட் படம் ரன் – படக்குழு வெளியிட்ட புது அப்டேட்!