Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தீமைதான் வெல்லும் என்ன நினைத்தாலும் – 10 ஆண்டுகளை நிறைவு செய்தது ரவி மோகனின் தனி ஒருவன் படம்

10 Years Of Thani Oruvan: நடிகர் ரவி மோகன் நாயகனாக நடித்து அவரது அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான படம் தனி ஒருவர். திரையரங்குகளில் இந்தப் படம் வெளியான போது மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் வெளியாகி தற்போது 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

தீமைதான் வெல்லும் என்ன நினைத்தாலும் – 10 ஆண்டுகளை நிறைவு செய்தது ரவி மோகனின் தனி ஒருவன் படம்
தனி ஒருவன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Aug 2025 17:36 PM

நடிகர் ரவி மோகன் (Actor Ravi Mohan) நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி 2015-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் தனி ஒருவர்ன். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவான இந்தப் படத்தை இயக்குநரும் நடிகர் ரவி மோகனின் அண்ணன் மோகன் ராஜா எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் அரவிந்த் சாமி வில்லனாக கலக்கியிருப்பார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் நயன்தாரா, தம்பி ராமையா, கணேஷ் வெங்கட்ராமன், ஹரிஷ் உத்தமன், ஸ்ரீசரண், ராகுல் மாதவ், நாசர், வம்சி கிருஷ்ணா, பிரபு, சுஹாசினி மணிரத்னம், ஜெயபிரகாஷ், கீதா, நாகிநீடு, மதுசூதன ராவ், சைஜு குருப், முகதா கோட்சே, அபிநயா, இளைய பாலையா, ஆர்.எம். ராம்நாத் ஷெட்டி, அனில் முரளி, காலேஷ், கிருஷ்காந்த், அஜய் ரத்னம், சிந்து, சஞ்சனா சிங், ஷரத், ஸ்ரீரஞ்சினி, சதீஷ், பிர்லா போஸ், தமிழ்செல்வி, அகிலேஷ், மகா காந்தி, ஆத்மா பேட்ரிக் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்து இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதே போல படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் சார்ப்பாக பிரபல தயரிப்பாளர்கள் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

தனி ஒருவன் படத்தின் கதை என்ன?

நடிகர் ரவி மோகன் ஏஎஸ்பி-யாக இந்தப் படத்தில் நடித்து இருப்பார். இவர் ஐபிஎஸ் பயிற்சியில் இருக்கும் போதே சமூகத்தில் நிலவும் தீய விசயங்களுக்கு எதிராக பல வேலைகளை செய்து வருவார். இதற்கு இவரது நண்பர்கள் உறுதுணையக இருப்பார்கள். இப்படி இருக்கும் நிலையில் ஏஎஸ்பியாக இருக்கும் ரவி மோகனுக்கு பிரபல சயிண்டிஸ்டாகவும் அரசியல் தலைவரின் மகனாகவும் இருக்கும் அரவிந்த் சாமி மீது சந்தேகம் வருகின்றது.

அவரது இந்த அதீத வளர்ச்சியில் எதோ பெரிய தப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து அதனை கண்டுபிடிக்க முயற்சி செய்வார். அந்த முயற்சியில் ரவி மோகன் வெற்றிப் பெற்றாரா இல்லையா என்பதே படத்தின் கதை. இந்தப் படத்தில் நடிகர்கள்கள் ரவி மோகன் மற்றும் அரவிந்த் சாமியின் நடிப்பு ரசிகர்களிடையே மாபெரும் பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Also Read… விரைவில் நடிகை நிவேதா பெத்துராஜிற்கு டும் டும் டும் – மாப்பிள்ளை யார் தெரியுமா?

இயக்குநர் மோகன் ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… செந்தமிழ் பேசும் அழகு ஜூலியட்… இணையத்தில் வைரலாகும் நடிகை ஜெனிலியாவின் இன்ஸ்டா போஸ்ட்!