LCU-வில் இணையும் நடிகர் ரவி மோகன் – வைரலாகும் தகவல்
Ravi Mohan: தமில் சினிமாவில் நாயகனகாக பல ஹிட் படங்களில் நடித்து தொடர்ந்து முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் ரவி மோகன் தற்போது தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்களில் வில்லனாக நடிக்கத் தொடங்கியுள்ளார். அந்த வகையில் இவர் தற்போது பென்ஸ் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல ஹிட் படங்களில் நாயகனாக நடித்து வருபவர் நடிகர் ரவி மோகன் (Actor Ravi Mohan). தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் ரவி மோகன் தற்போது தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் பராசக்தி. இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து வருகிறார். இதில் நடிகர் ரவி மோகன் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் நடிகர் ரவி மோகன் வில்லனாக நடிப்பது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் நடிகர் ரவி மோகன் நாயகனாக நடிக்கும் படங்களின் அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.
அதன்படி கராத்தே பாபு படத்தில் நடிகர் ரவி மோகன் அரசியல்வாதியாக நடித்துள்ளார். மேலும் ஜீனி படத்தில் ஃபேண்டசி கதாப்பாத்திரத்தில் நடிகர் ரவி மோகன் நாயகனாக நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்த நிலையில் நடிகர் ரவி மோகன் சினிமாவில் தயாரிபாளர் அவதாரத்தை எடுத்துள்ளார்.




பென்ஸ் படத்தில் வில்லனாகும் நடிகர் ரவி மோகன்:
இந்த நிலையில் நடிகர் ரவி மோகன் பென்ஸ் படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் இந்தப் படத்தை இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். மேலும் இந்தப் படத்தின் திரைக்கதையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படத்தை பேஷன் ஸ்டுடியோஸ், தி ரூட், ஜி ஸ்குவாட் ஆகிய தயாரிப்பு நிறுவனங்களின் கீழ் சுதன் சுந்தரம், லோகேஷ் கனகராஜ், ஜெகதீஷ் பழனிசாமி ஆகிய தயாரிப்பாளர்கள் இணைந்து தயாரித்து வருகின்றனர். இந்தப் படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடித்து வரும் முன்னதாக நடிகர் நிவின் பாலி வில்லனாக நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. இது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Also Read… சிவகார்த்திகேயனின் அமரன் படத்திற்கு கிடைத்த புது விருது… மகிழ்ச்சியில் படக்குழு
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#RaviMohan onboard into the LCU🚨#LokeshKanagaraj himself narrated the script of #BENZ to RaviMohan. He will be doing the Equal important Protagonist role🔥
Loki promised that RaviMohan will be also be part of #Kaithi2 & #Vikram3✅. Lokesh has specially designed his character… pic.twitter.com/N4l1dyEcZq
— AmuthaBharathi (@CinemaWithAB) August 26, 2025
Also Read… விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தின் ஓடிடி அப்டேட்டை வெளியிட்ட படக்குழு