சந்தோஷ் சுப்ரமணியம் ஹிட் சீனை ரீ கிரியேட் செய்த ஜெனியா – ரவி மோகன்
Ravi Mohan and Genelia: நடிகர் ரவி மோகன் தற்போது நடிகராக மட்டும் இன்றி சினிமாவில் மற்றொரு அவதாரத்தை எடுத்துள்ளார். ஆம் அவர் தற்போது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த தொடக்க விழாவிற்கு பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு பேசினர். இந்த விழாவில் நடிகை ஜெனிலியாவும் கலந்துகொண்டார்.

இயக்குநர் மோகன் ராஜா (Director Mohan Raja) இயக்கத்தில் கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் சந்தோஷ் சுப்ரமணியம். ரொமாண்டிக் காமெடி படமாக வெளியான சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் நடிகர் ரவி மோகன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை ஜெனிலியா நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சந்தானம், பிரேம் ஜி. ஸ்ரீநாத், சத்யன், கீதா, கௌசல்யா, கிராத், எம்.எஸ்.பாஸ்கர், சடகோப்பன் ரமேஷ், விஜயகுமார், சாயாஜி ஷிண்டே, மனோபாலா, மாணிக்க விநாயகம், புஷ்பவனம் குப்புசாமி, ரவிராஜ், செவ்வாலை ராசு, அனு ஹாசன், நீலிமா ராணி, சத்திய கிருஷ்ணன், தேசிக ஸ்ரீ, ஷோபி என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் திரையர்னக்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் ஜெனிலியா மற்றும் ரவி மோகனின் நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் வரும் பல காட்சிகளை ரசிகர்கள் மீண்டும் மீண்டும் ரீ கிரியேட் செய்தது குறிப்பிடத்தக்கது.
சந்தோஷ் சுப்ரமணியம் பட காட்சியை மீண்டும் ரீ கிரியேட் செய்த நடிகர்கள்:
இந்த நிலையில் இன்று ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனத்தின் திறப்பு விழாவில் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு வாழ்த்தினர். இதில் நடிகை ஜெனிலியா மற்றும் அவரது கணவர் இருவரும் கலந்துகொண்டு நடிகர் ரவி மோகனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் நடிகர்கள் ரவி மோகன் மற்றும் ஜெனிலியா இருவரும் சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் இருக்கும் சூப்பர் ஹிட் காட்சியை இருவரும் மேடையில் செய்துக் காட்டி அனைவரையும் சர்ப்ரைஸ் செய்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… சிவகார்த்திகேயனின் அமரன் படத்திற்கு கிடைத்த புது விருது… மகிழ்ச்சியில் படக்குழு
இணையத்தில் வைரலாகும் ரவி மோகன் – ஜெனிலியா வீடியோ:
Wow…This is super Cute😍🫶#RaviMohan & #Genelia recreating the iconic scene of SanthoshSubramaniam♥️
The Kombu moment at the last 🥰 pic.twitter.com/GsW2ZP3XFo
— AmuthaBharathi (@CinemaWithAB) August 26, 2025