Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vishal35 : புரட்சி தளபதி விஷாலின் 35வது திரைப்படம்.. அதிரடியாக வெளியான டைட்டில் டீசர்!

Vishal35 Title Teaser : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஷால். இவர் இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில், விஷால்25 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் நிலையில், படக்குழு இப்படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டுள்ளது.

Vishal35 : புரட்சி தளபதி விஷாலின் 35வது திரைப்படம்.. அதிரடியாக வெளியான டைட்டில் டீசர்!
விஷால்35 டைட்டில் டீசர்
Barath Murugan
Barath Murugan | Published: 24 Aug 2025 16:39 PM

நடிகர் விஷாலின் (Vishal) முன்னணி நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான படம் மத கஜ ராஜா (Madha Gaja Raja). இந்த படமானது 12 வருடத்திற்கு பின் கடந்த 2025 ஜனவரி மாதத்தில் வெளியானது. இந்த படத்தை இயக்குநர் சுந்தர் சி (Sundar C) இயக்கி, சூப்பர் ஹிட் கொடுத்திருந்தார். இதை அடுத்தாக நடிகர் விஷால் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி, நடிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், நடிகர் விஷால் இயக்குநர் ரவி அரசு (Ravi Arasu) இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்துள்ளார். இப்படமானது கடந்த 2025, ஜூலை மாதத்தில் விஷால்35 என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் தொடங்கியிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றுவரும் நிலையில், படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ரவி அரசு மற்றும் விஷாலின் கூட்டணியில் உருவாகிவரும் படத்திற்கு “மகுடம்” (Magudam) என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியான இந்த டைட்டில் டீசர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் ஏற்கனவே மகுடம் என, 1992ம் ஆண்டு திரைப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது. அந்த படத்தில் நடிகர் சத்யராஜ் மற்றும் கவுதமி இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : உலக அளவில் 100 கோடி வசூலித்த தலைவன் தலைவி படம் – உற்சாகத்தில் படக்குழு

நடிகர் விஷால் வெளியிட்ட மகுடம் திரைப்படத்தின் டைட்டில் டீசர் பதிவு :

விஷாலின் மகுடம் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக, நடிகை துஷாரா விஜயன் நடித்து வருகிறார். மேலும் முக்கிய வேடத்தில் நடிகை அஞ்சலியும் நடித்து வருகிறார். இவர் மத கஜ ராஜா படத்தை அடுத்ததாக, விஷாலுடன் இந்த மகுடம் திரைப்படத்திலும் இணைந்து நடித்து வருகிறார். இந்த மகுடம் படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் நடிகர் ஜீவா மற்றும் ஆர்.பி. சௌத்ரி இணைந்து தயாரித்து வருகின்றனர். இப்படமானது கப்பல் மற்றும் கடத்தல்கள் சார்ந்த கதைக்களத்துடன் உருவாகி வருகிறதாம்.

இதையும் படிங்க : என்னால சினிமாவில் அப்படிதான் இருக்க முடியும் – நடிகை கல்யாணி பிரியதர்ஷன் சொன்ன விச்யம்

தமிழில் ஏற்கனவே நடிகர் கார்த்தி மற்றும் சூரி உட்பட பல நடிகர்கள் கடற்கரை சார்ந்த படங்களில் நடித்து வருகின்றனர். அதை தொடர்ந்து நடிகர் விஷாலும், இது போன்ற கதைக்களம் கொண்ட படத்தில் நடித்து வருகிறார்.

விஷாலின் மகுடம் படம் :

இந்த மகுடம் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். இவர் ஏற்கனவே விஷாலின் நான் சிகப்பு மனிதன் என்ற படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். அதை அடுத்தாக 2வது முறையாக விஷாலின் படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மகுடம் படமானது வரும் 2026ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.