ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கானின் கதாப்பாத்திரம் இதுவா? வைரலாகும் தகவல்
Shah Rukh Khan Character in Jailer 2 Movie Update: தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2. இந்தப் படத்தில் ஷாருக்கான் நடிப்பதாக தகவல்கள் தெரிவித்த நிலையில் அவரது கதாப்பாத்திரம் குறித்து தற்போது பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் வெளியாகும் முன்னணி நடிகர்களின் படங்களில் மற்ற மொழிகளில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் கேமியோ ரோலில் நடிப்பது வழக்கமாக உள்ளது. அதன்படி முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான கூலி படத்தில் பான் இந்திய மொழிகளில் இருந்து பல பிரபலங்கள் கேமியோ வேடத்தில் நடித்து இருந்தனர். இதில் நாகர்ஜுனா வில்லனாகவும், ஷௌபின் ஷாகிர், உபேந்திரா ராவ் மற்றும் பாலிவுட் சினிமாவில் இருந்து நடிகர் அமீர் கான் ஆகியோர் நடித்து இருந்தனர். இவர்களின் கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பிரபலங்களின் படங்களில் மற்ற மொழி நடிகர்கள் நடிப்பது வழக்கமாக உள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள ஜெயிலர் 2 படத்திலும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.
அதன்படி முன்னதகாக ஜெயிலர் படத்தின் முதல் பாகத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து மற்ற மொழி பிரபலங்களான மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்து இருந்தனர். இந்த நிலையில் தற்போது ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகத்திலும் பலர் கேமியோ வேடத்தில் நடிப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வந்தது.




ரஜினிகாந்துடன் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் அவரின் கேரக்டர் இதுதானா?
அதன்படி ஜெயிலர் 2 படத்தில் பாலிவுட்டின் பாட்ஷா என்று அழைக்கப்படும் நடிகர் ஷாருக்கான் நடிப்பதாக முன்பு தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் இந்தப் படத்தில் அவர் காவல்துறை அதிகாரியாக நடிப்பதாக தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஓய்வுப்பெற்ற காவல்துறை அதிகாரியாக நடித்து இருந்த நிலையில் ஷாருக்கானும் காவல்துறை அதிகாரியாக நடிப்பதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Jailer2 – #ShahRukhKhan to appear as Cop in the film👮♂️🔥
Superstar #Rajinikanth already plays a Ex-Cop role in it🤝
An extended cameo of around one week is going to be shot with SRK this month with a combination of Superstar, SRK & SJSuryah🤩🌟As Like Part-1, seems Part-2 is…
— AmuthaBharathi (@CinemaWithAB) March 9, 2026
Also Read… மீண்டும் தள்ளிப்போகும் ஜன நாயகன் சென்சார் விவகாரம்… ரிவைசிங் கமிட்டி பார்வை ஒத்திவைப்பு?