AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விரைவில் வெளியாகும் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டீசர் – வைரலாகும் தகவல்

Vishwanath And Sons teaser update: தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் 46-வது படமாக உருவாகி உள்ள படம் விஸ்வநாத் & சன்ஸ். இந்தப் படத்தின் டீசர் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விரைவில் வெளியாகும் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டீசர் – வைரலாகும் தகவல்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 07 Mar 2026 10:36 AM IST

தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான நடிகராக வலம் வருகிறார் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் மட்டும் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி காத்திருக்குன்றது. அதன்படி நடிகர் சூர்யாவின் நடிப்பில் முன்னதாக ரெட்ரோ படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா தனது அடுத்தடுத்தப் படங்களில் ஒப்பந்தம் ஆகி நடிக்கத் தொடங்கினார். அதன்படி நடிகர் சூர்யாவின் 45-வது படமான கருப்பு, 46-வது படமான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் மற்றும் சூர்யா 47 ஆகியப் படங்களின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இதில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி உள்ள கருப்பு படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வைரலாகி வருகின்றது.

அதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா தனது 46-வது படத்திற்காக தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநராக உள்ள இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒப்பந்தம் ஆனார். இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. அதன்படி படத்திற்கு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் போஸ்டரில் ஒரு கைக் குழந்தையுடன் நடிகர் சூர்யா இருப்பது போல காட்டப்பட்டு இருந்தது. அது ஒரு சிங்கிள் ஃபாதர் கதை போல உள்ளதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

விரைவில் வெளியாகும் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டீசர்:

இந்த நிலையில் இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தினை சூர்யாவின் கருப்பு படத்தின் ரிலீஸிற்கு பிறகே வெளியிடுவோம் என்று தயாரிப்பாளர் நாக் வம்சி முன்பு பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார். அதன்படி படம் வருகின்ற ஜூலை மாதம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் டீசர் குறித்த அப்டேட் ஒன்று சினிமா வட்டாரங்களில் கசிந்து வைரலாகி வருகின்றது.

சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் டீசர் சென்சார் செய்யப்பட்டு விரைவில் வெளியிட தயாராக உள்ளது. 1 நிமிடம் 44 வினாடிகள் கொண்ட டீசர். கருப்பு மற்றும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படக்குழுவினரிடம் இருந்து அடுத்தடுத்து அப்டேட்கள் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… சாரா அர்ஜுன் என் மகள் மாதிரி – இயக்குநர் ஏ.எல்.விஜய் நெகிழ்ச்சி

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… என் மகளுக்காக என்ன வேணும்னாலும் செய்வேன்… ஆக்‌ஷன் காட்சிகளுடன் வெளியானது லெஜண்ட் சரவணனின் லீடர் பட டீசர்!

Follow Us