AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வாடிவாசல் படத்தின் தற்போதைய நிலை என்ன? வைரலாகும் தகவல்

Vaadivaasal Movie Shooting Update : தமிழ் சினிமாவில் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாக காத்திருந்த படம் வாடி வாசல். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அப்டேட் குறித்து தற்போது சினிமா வட்டாரங்களில் பரவி வருகின்றது. அதுகுறித்து தற்போது இந்த செய்தியில் பார்க்கலாம்.

வாடிவாசல் படத்தின் தற்போதைய நிலை என்ன? வைரலாகும் தகவல்
வாடிவாசல்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 04 Mar 2026 13:43 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் விடுதலை பாகம் 2. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்ததாக வாடிவ் ஆசல் படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் இந்தப் படத்தில் இந்தப் படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் விடுதலை பாகம் இரண்டிற்கு பிறகு படமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் நடிகர் சூர்யாவோ மற்ற இயக்குநர்களின் படங்களில் நடிக்க தொடர்ந்து ஒப்பந்தம் ஆகி வந்தார்.

இதன் காரணமாக இயக்குநர் வெற்றி மாறன் மற்றும் சூர்யா இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக தகவல்கள் வெளியானது. தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத காரணத்தால் படம் இனி வராது என்று ரசிகர்கள் நினைக்கத் தொடங்கினர். அதனைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறனும் நடிகர் சிம்புவை வைத்து அரசன் படத்தை இயக்கத் தொடங்கினார். இதன் காரணமாக வாடிவாசல் படம் நடக்குமா நடக்காதா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் தற்போது தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

வாடிவாசல் படத்தின் தற்போதைய நிலை என்ன?

வாடிவாசல் படம் பல வருட விரிவான முன் தயாரிப்புக்குப் பிறகு இந்த திட்டம் நடந்து வருகிறது. இயக்குனர் வெற்றிமாறன் சமீபத்தில் சூர்யாவை சந்தித்து இந்த திட்டம் குறித்து விவாதித்து 130 நாள் கால்ஷீட்டை கோரியுள்ளார். சூர்யா மாதத்திற்கு 10 நாள் கால்ஷீட் தருவதாக உறுதியளித்துள்ளார், படத்தின் மற்ற வேலைகளையும் சேர்த்து சமன் செய்துள்ளார். தற்போது, ​​ஆரம்பம் மற்றும் க்ளைமாக்ஸ் தவிர, மற்ற அனைத்து பகுதிகளும் விவரிக்கப்பட்டுள்ளன, மேலும் அவை தெளிவாக உள்ளன. அரசனுக்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்கும். தொடங்கிய பிறகு, படம் திரையரங்குகளுக்கு வர குறைந்தது 2 ஆண்டுகள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, குறைந்தபட்சம் ஒன்றரை வருட படப்பிடிப்பு, ஒரு பிரம்மாண்டமான படைப்பாக அதன் அளவைக் கருத்தில் கொண்டு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Suraj Venjaramoodu: ‘தனுஷ் ஒரு ஸ்டார் பெர்ஃபார்’.. புகழ்ந்து பேசிய நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… கலர்ஃபுல்லான சங்கீத் புகைப்படங்களைப் பகிர்ந்த ராஷ்மிகா மந்தனா – வைரலாகும் போட்டோஸ்

Follow Us