IND vs SL: இலங்கையில் அதிதீவிரமாக சுழலும் பந்து.. பயிற்சியில் கடுமையாக சுழன்ற கே.எல்.ராகுல்.. ட்ரெண்ட் அடிக்கும் வீடியோ!
KL Rahul Practice: கே.எல்.ராகுலும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் நேற்று அதாவது 2026 ஆகஸ்ட் 3ம் தேதி மும்பையில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். ஒரு சுற்றுப்பயணத்திற்கு முன்பு பேட்ஸ்மேன்கள் தயாராவது வழக்கம் என்றாலும், இந்த பயிற்சி அமர்வு மிகவும் சிறப்பானதாக இருந்தது. ஏனெனில் இரு பேட்ஸ்மேன்களும் சுழற்பந்துவீச்சை அதிகளவில் எதிர்கொண்டு தீவிரமாக பயிற்சி மேற்கொண்டனர்.
இந்தியா – இலங்கை இடையிலான (IND vs SL) முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 2026 ஆகஸ்ட் 15ம் தேதி இலங்கையில் உள்ள காலி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. அதன்படி, இந்திய அணிக்கு இலங்கையை அதன் சொந்த மண்ணில் தோற்கடிப்பது எளிதாக இருக்காது. பொதுவாகவே, இலங்கை ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். மேலும் இந்த அடிப்படையில் இந்திய அணி இந்தியாவைத் தோற்கடிக்க முயற்சிக்கும். இருப்பினும், இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் (KL Rahul) இதைச் சமாளிக்கத் தயாராகியுள்ளனர்.
ALSO READ: இலங்கைக்கு 2 வீரர்களை அவசரமாக அனுப்பும் பிசிசிஐ.. இந்த முக்கிய முடிவுக்கு காரணம் என்ன?




இலங்கை ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானவை. மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சுழற்பந்துவீச்சுதான் இலங்கை அணியின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. அதுவே இலங்கையின் இறுதி ஆயுதம், எந்த அணியையும் வீழ்த்தும் திறன் கொண்டது. சமீபகாலமாக, இந்திய பேட்ஸ்மேன்கள் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்வதில் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடுவது இந்தியாவிற்கு ஒரு பிரச்சனையாக மாறியுள்ளது.
கே.எல்.ராகுல் பயிற்சி மேற்கொண்ட வீடியோ:
KL Rahul Working hard for Sri Lanka Series, used turn surface #KLRahul #Cricket #SLvINDpic.twitter.com/lxEw85KnRa
— Cricket Guru (@CricketGuru_CG) August 4, 2026
இந்தநிலையில், கே.எல்.ராகுலும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் நேற்று அதாவது 2026 ஆகஸ்ட் 3ம் தேதி மும்பையில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். ஒரு சுற்றுப்பயணத்திற்கு முன்பு பேட்ஸ்மேன்கள் தயாராவது வழக்கம் என்றாலும், இந்த பயிற்சி அமர்வு மிகவும் சிறப்பானதாக இருந்தது. ஏனெனில் இரு பேட்ஸ்மேன்களும் சுழற்பந்துவீச்சை அதிகளவில் எதிர்கொண்டு தீவிரமாக பயிற்சி மேற்கொண்டனர். அவர்கள் தொடக்க ஆட்டக்காரர்களாக இருப்பதாலும், பொதுவாக புதிய பந்தில் வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதாலும், இருவரும் சுழற்பந்துவீச்சாளர்களை அடிக்கடி எதிர்கொள்வது காணப்பட்டது. இருப்பினும், இலங்கையின் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, சுழற்பந்துவீச்சாளர்களே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறார்கள்.
ALSO READ: மனதளவில் சோர்வை கொடுத்த ஓனர்.. கோயங்கா பெயரை சொல்லாமல் சொன்ன கே.எல்.ராகுல்!
இரு வீரர்களும் பயிற்சி மேற்கொண்டது எங்கே..?
கே.எல்.ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் பாந்த்ராவில் உள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஜதின் பரஞ்ச்பேவின் அகாடமியில் பயிற்சி பெற்றனர். இருவரும் இலங்கை டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் கடந்த சில நாட்களாக அங்கு பயிற்சி செய்து வருகின்றனர். இந்திய அணி இன்று அதாவது 2026 ஆகஸ்ட் 4ம் தேதி இலங்கைக்குப் புறப்படவுள்ள நிலையில், அதற்கு முந்தைய நாளான 2026 ஆகஸ்ட் 3ம் தேதி வரை, இரு பேட்ஸ்மேன்களும் தங்களது சுழற்பந்து வீச்சுத் திறனை மேம்படுத்திக் கொண்டிருந்தனர்.