WTC 2027: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கில்லுக்கு காத்திருக்கும் சாதனை.. படைத்தால் முதல் இந்தியர் என்ற ரெக்கார்ட்!
Shubman Gill Record: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த முதல் 10 பேட்ஸ்மேன்களின் பட்டியலில் ஒரு இந்தியர் கூட இடம்பெறவில்லை. இந்திய கேப்டன் சுப்மன் கில் இந்தப் பட்டியலில் இடம்பெறுவதற்கு மிக அருகில் உள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்தவர் சுப்மன் கில் தான். 40 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 73 இன்னிங்ஸ்களில் கில் 2,843 ரன்கள் எடுத்துள்ளார்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் (World Test Championship) முதல் பதிப்பு 2019 முதல் 2021 வரை நடைபெற்றது. அதன் பிறகு, 3 பதிப்புகள் விளையாடப்பட்டுள்ளன. இதன் நான்காவது பதிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அதன் வரலாற்றில் பல சிறந்த பேட்ஸ்மேன்களை கண்டுள்ளது. இந்த பேட்ஸ்மேன்களில் சிலர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் குறிப்பிடத்தக்க அளவு ரன்களைக் குவித்துள்ளனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் (WTC) அதிக ரன்கள் எடுத்த வீரர்களைப் பொறுத்தவரை, இந்தப் பட்டியலில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். இங்கிலாந்தின் அதிரடி ஆட்டக்காரரும் டெஸ்ட் கேப்டனுமான ஜோ ரூட் (Joe Root) மட்டுமே WTC-யில் 6,000 ரன்களுக்கு மேல் எடுத்த ஒரே பேட்ஸ்மேன் ஆவார். சுவாரஸ்யமாக, ரூட்டைத் தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் இதுவரை 5,000 ரன்கள் என்ற மைல்கல்லை தாண்டவில்லை.
ALSO READ: இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு.. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்.. பும்ரா காயத்தால் விலகல்!
இந்திய பேட்ஸ்மேன்கள் எத்தனையாவது இடம்..?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த முதல் 10 பேட்ஸ்மேன்களின் பட்டியலில் ஒரு இந்தியர் கூட இடம்பெறவில்லை. இந்திய கேப்டன் சுப்மன் கில் இந்தப் பட்டியலில் இடம்பெறுவதற்கு மிக அருகில் உள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்தவர் சுப்மன் கில் தான். 40 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 73 இன்னிங்ஸ்களில் கில் 2,843 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 43.07 ஆகும். எனவே, இலங்கை சுற்றுப்பயணத்தில் நடைபெறும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் கில் 157 ரன்கள் எடுத்தால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 3,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெறுவார். மேலும், அவர் பல பேட்ஸ்மேன்களை முந்தி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் முதல் 10 இடங்கள் கொண்ட பட்டியலில் இணைவார். தற்போது சுப்மன் கில் இந்தப் பட்டியலில் 13வது இடத்தில் உள்ளார்.




ALSO READ: பயிற்சியாளர் குழுவில் விடைபெற்ற டி திலீப்.. உணர்ச்சி வசப்பட்ட ரோஹித் சர்மா!
உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்கள்:
- சுப்மன் கில் – 2843
- ரிஷப் பண்ட் – 2780
- ரோஹித் ஷர்மா – 2716
- விராட் கோலி – 2617
- ரவீந்திர ஜடேஜா – 2610
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 157 ரன்கள் குவிப்பதன் மூலம், சுப்மன் கில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் (WTC) மட்டுமல்லாமல், டெஸ்ட் கிரிக்கெட்டிலும் 3,000 ரன்களை எட்டவுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 3,000 ரன்களை எட்டிய 28-வது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை கில் பெறுவார். இலங்கையில் கில் பங்கேற்கும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும். ரன்களைக் குவிப்பது மற்றும் இந்திய அணியை வழிநடத்துவது ஆகிய கடினமான சவாலை கில் எப்படி எதிர்கொள்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.