AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Team India: இலங்கை சுற்றுப்பயணம்.. பும்ராவிற்கு பதிலாக இந்த ரஞ்சி நட்சத்திரத்திற்கு வாய்ப்பு..!

Jasprit Bumrah Replacement: ஆகிப் நபியின் தேர்வு குறித்த தகவலை பிசிசிஐ சமூக வலைதளங்களில் பகிர்ந்து, ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஆகிப் நபி பந்துவீச்சாளர் முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. உள்ளூர் கிரிக்கெட்டில் தனது சிறப்பான ஆட்டத்தின் காரணமாக ஆகிப் நபிக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

Team India: இலங்கை சுற்றுப்பயணம்.. பும்ராவிற்கு பதிலாக இந்த ரஞ்சி நட்சத்திரத்திற்கு வாய்ப்பு..!
ஆகிப் நபி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 03 Aug 2026 14:43 PM IST

ஜம்மு காஷ்மீர் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபிக்கு இந்திய அணியில் (Indian Cricket Team) வாய்ப்பு கிடைத்துள்ளது. இலங்கைக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு (Jasprit Bumrah) பதிலாக நபி இடம்பெறுவார். இலங்கை சுற்றுப்பயணத்திற்கான டெஸ்ட் அணியிலிருந்து கடைசி நிமிடத்தில் பும்ரா நீக்கப்பட்டார். அவரது முழங்கால் காயம் இன்னும் நீடிப்பதாக தெரிகிறது. இதன் காரணமாக, பிசிசிஐ மருத்துவக் குழு அவரை ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளது. பும்ரா வெளியேறிய பிறகு, யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்தது. தற்போது தேர்வாளர்கள் ஆகிப் நபியின் பெயரை அறிவித்துள்ளனர்.

ALSO READ: பும்ரா இல்லாததால் பந்துவீச்சில் பலம் குறைந்த இந்திய அணி.. மாற்று வீரராக யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்?

ஆகிப் நபியின் தேர்வு குறித்து பிசிசிஐ வெளியிட்ட தகவல்:


ஆகிப் நபியின் தேர்வு குறித்த தகவலை பிசிசிஐ சமூக வலைதளங்களில் பகிர்ந்து, ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஆகிப் நபி பந்துவீச்சாளர் முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. உள்ளூர் கிரிக்கெட்டில் தனது சிறப்பான ஆட்டத்தின் காரணமாக ஆகிப் நபிக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த 2 ரஞ்சி கோப்பை சீசன்களில் நபி 104 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவற்றில் 60 விக்கெட்டுகள் 2025-26 சீசனில் எடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜம்மு காஷ்மீர் அணி தனது முதல் ரஞ்சி கோப்பையை வெல்லவும் ஆகிப் நபி உதவினார்.

வலது கை வேகப்பந்து வீச்சாளரான ஆகிப் நபி, சமீபத்தில் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய ‘ஏ’ அணியிலும் இடம்பெற்றிருந்தார். அங்கு நடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் நபி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இலங்கை பயணத்திட்டம்

இந்திய அணி வருகின்ற 2026 ஆகஸ்ட் 4ம் தேதி இலங்கைக்குப் புறப்படும். அங்கு, இந்திய அணி 2026 ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் கொழும்பில் 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுவார்கள். மேலும், தொடரின் முதல் டெஸ்ட் போட்டியை வருகின்ற 2026 ஆகஸ்ட் 15ம் தேதி முதல் காலியில் விளையாடுவார்கள். இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது 2026 ஆகஸ்ட் 22ம் தேதி கொழும்பில் தொடங்கும்.

ALSO READ: 2027 உலகக் கோப்பையில் இடம் இருக்குமா? எதிர்காலம் குறித்து மனம் திறந்த புவனேஷ்வர் குமார்!

ஆகிப் நபிக்கும் ஐபிஎல்-லில் விளையாடிய அனுபவம் உண்டு. கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அவரை 8.40 கோடி ரூபாய் என்ற பெரும் தொகைக்கு வாங்கியது. முதல் சீசனில் அவரால் எதிர்பார்த்தபடி செயல்பட முடியவில்லை. அந்த சீசன் முழுவதும் நபி 5 போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்த போதிலும், அவரால் ஒரு விக்கெட்டைக் கூட எடுக்க முடியவில்லை. இந்த அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்ட ஆகிப் நபி, இப்போது அணியில் சிறப்பாகச் செயல்படுவார் என்று நம்புகிறார்.

Follow Us