AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs SL: பும்ரா இல்லாததால் பந்துவீச்சில் பலம் குறைந்த இந்திய அணி.. மாற்று வீரராக யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்?

Indian Cricket Team: ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பதிலாக அணியில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது இன்னும் உறுதியாகவில்லை. இதற்கிடையில், பும்ராவின் விலகல் அல்லது அவருக்குப் பதிலாக யார் விளையாடுவார் என்பது குறித்து பிசிசிஐ இதுவரை எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. இருப்பினும், அவருக்குப் பதிலாக யாருக்கு வாய்ப்பு வழங்கலாம் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

IND vs SL: பும்ரா இல்லாததால் பந்துவீச்சில் பலம் குறைந்த இந்திய அணி.. மாற்று வீரராக யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்?
பும்ரா - அகிப் நபி தார்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 02 Aug 2026 19:43 PM IST

இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, காயம் காரணமாக இலங்கைக்கு (IND vs SL) எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இந்த முக்கியமான தொடரில் பும்ரா பங்கேற்காதது இந்திய அணிக்கு ஒரு பெரிய பின்னடைவாகும். அவருக்குப் பதிலாக யார் களமிறங்குவார் என்ற ஆர்வம் நிலவுகிறது. பும்ராவுக்குப் பதிலாக ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் அகிப் நபி தார் இந்திய அணியில் (Indian Cricket Team) இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், இந்தியா – இலங்கை இடையிலான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் பும்ராவுக்கு பதிலாக யாருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு.. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்.. பும்ரா காயத்தால் விலகல்!

காயம் காரணமாக பும்ரா விலகல்:

இலங்கைக்கு எதிரான வரவிருக்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விலக்கப்பட்டுள்ளார் என டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. பும்ரா தனது காயத்திலிருந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை. எனவே, பும்ரா குணமடைய அவகாசம் அளிக்கும் வகையில், அவரை டெஸ்ட் தொடரில் இருந்து விலக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா பங்கேற்காதது அணிக்கு ஒரு பின்னடைவாக அமைந்துள்ளது. ஏனெனில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தகுதிபெற இந்திய அணி, இலங்கைக்கு எதிரான இந்தத் தொடரை 2-0 என்ற கணக்கில் வெல்ல வேண்டும். இத்தகைய சூழ்நிலையில், இந்தத் தொடரில் பும்ரா இல்லாதது அணியைச் சிக்கலில் ஆழ்த்தியுள்ளது.

ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பதிலாக அணியில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது இன்னும் உறுதியாகவில்லை. இதற்கிடையில், பும்ராவின் விலகல் அல்லது அவருக்குப் பதிலாக யார் விளையாடுவார் என்பது குறித்து பிசிசிஐ இதுவரை எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. இருப்பினும், அவருக்குப் பதிலாக யாருக்கு வாய்ப்பு வழங்கலாம் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பும்ராவிற்குப் பதிலாக யாரைத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்து பிசிசிஐ சீனியர் தேர்வு குழு விரைவில் முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, இளம் ஜம்மு காஷ்மீர் வேகப்பந்து வீச்சாளர் அகிப் நபி தார் இந்தப் போட்டியில் முன்னணியில் உள்ளார். அகிப் நபி தார் இதுவரை இந்திய அணிக்காக விளையாடவில்லை என்றாலும், 2025-26 ரஞ்சி கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி, ஜம்மு காஷ்மீர் தனது முதல் ரஞ்சி கோப்பையை வெல்வதில் முக்கியப் பங்காற்றினார்.

ALSO READ: குறைக்கப்பட்ட நாட்கள்.. மாற்றப்பட்ட இந்தியா – இலங்கை தொடர் அட்டவணை..!

எனவே, அகிப் நபி தார் தேர்ந்தெடுக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. பும்ரா இல்லாத நிலையில், இந்தியாவின் பந்துவீச்சுத் துறைக்கு முகமது சிராஜ் தலைமை தாங்குவார். அவருடன் பிரசித் கிருஷ்ணா மற்றும் இளம் வேகப்பந்து வீச்சாளர் குர்னூர் பிரார் ஆகியோர் சிறப்பாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அகிப் நபிக்கு வாய்ப்பு கிடைத்தால், அவராலும் அணிக்கு உதவ முடியும்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக அணியுடன் பயிற்சி மேற்கொண்டிருந்த அகிப் நபி, கடந்த 2026 ஆகஸ்ட் மாதம் இந்திய ‘ஏ’ அணியுடன் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். உள்நாட்டுப் போட்டிகளில் ஜம்மு காஷ்மீர் அணிக்காகத் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் நபி, இலங்கையில் இதுவரை விளையாடிய 2 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Follow Us