நீங்க பன்னது அக்ரசிவ் இல்லையா? ஆனந்தியை லெஃப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி – வைரலாகும் வீடியோ
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி தற்போது இரண்டு வாரங்களை முடிவு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் வாரம் முழுவதும் நடந்த சம்பவங்கள் குறித்து விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியை கடந்த 06-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதி தொடங்கி வைத்தார். மேலும் மிகவும் பிரமாண்டமாக உருவான இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களை அறிமுகம் செய்து வீட்டிற்குள் அனுப்பி வைத்தார் நடிகர் விஜய் சேதுபதி. கடந்த வாரம் முதல் வார இறுதியில் பல சம்பவங்கள் நடைப்பெற்றது. அதில் வாரம் முழுவதும் நடைப்பெற்ற சம்பவங்கள் குறித்து பேசியது மட்டும் இன்றி தலைமை பண்பு குறித்து பேசியது இணையத்தில் பெரும் சர்ச்சையைகிளப்பியது. இதனைத் தொடர்ந்து இணையத்தில் பல ட்ரோல்களை சந்தித்தார் விஜய் சேதுபதி. இந்த நிலையில் நேற்று நடைப்பெற்ற நிகழ்சியில் நடிகர் விஜய் சேதுபதி இந்த நிகழ்விற்கு விளக்கம் அளித்து பேசியது இணையத்தில் வைரலானது.
அதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் கடந்த வாரம் முழுவதும் நடைப்பெற்ற டாஸ்குகளில் போட்டியாளர்களின் பங்களிப்பு மற்றும் போட்டியாளர்களிடையே ஏற்பட்ட சலசலப்பு குறித்து வெளிப்படையாக நடிகர் விஜய் சேதுபதி பேசியுள்ளார். அதில் ஆனந்தி மற்றும் லக்ஷ்மி பிரியா இடையே ஏற்பட்ட மோதல் குறித்து பேசியுள்ளார்.




பிக்பாஸில் ஆனந்தியை லெஃப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி:
அதன்படி சீஸ் டாஸ்கில் ஆனந்தி முதலில் லக்ஷ்மி பிரியாவின் கழுத்தில் ஏறி நின்றார். அதனைத் தொடர்ந்து லக்ஷ்மி பிரியா ஆனந்தியின் காலை பிடித்து இழுத்து கீழே தள்ளினார். இதுகுறித்து இன்று விஜய் சேதுபதி பேசுகிறார். அதில் ஆனந்தி லக்ஷ்மி பிரியா குறித்து புகார் அளிக்க ஆனந்தி நீங்க செய்தது மட்டும் சரியா என்று வெளிப்படையாக் கேள்வி எழுப்பினார். அது தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day14 #Promo2 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision pic.twitter.com/RiEUVbPsQN
— Vijay Television (@vijaytelevision) September 20, 2026
Also Read… தென்னிந்திய மொழிகளில் இந்த வாரம் ஓடிடியில் வரிசைக்கட்டும் படங்கள்… லிஸ்ட் இதோ!