கீர்த்தி சுரேஷின் டோரதி படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? – அறிவிப்பை பகிர்ந்த படக்குழு!
Dorothy Movie Trailer Release Update: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்திலும், இளையராஜா இசையிலும் உருவாகியுள்ள புதிய காம்போ திரைப்படம்தான் டோரதி. இதில் கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிய நிலையில், இதன் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் கார்த்திக் சுப்புராஜ் (Karthik Subburaj). இவரின் இயக்கத்தில் இதுவரை மொத்தமாக 09 திரைப்படங்கள் திரைப்படங்கள் வெளியாகியிருக்கும் நிலையில், 10வது திரைப்படமாக உருவாகியுள்ளதுதான் டோரதி (Dorothy). இதை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க, அவரின் தயாரிப்பு நிறுவனமே தயாரித்துள்ளது. இதில் நடிகை கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh) லீட் நாயகியாக நடிக்க, அவருடன் நடிகர்கள் சனந்த் (Sananth) மற்றும் ரிஷிகாந்த் (Rishikanth) போன்ற நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் கார்த்திக் சுப்புராஜின் 10வது திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் மீது எதிர்பார்ப்புகள் உள்ளது. இப்படம் வித்தியாசமான ஆக்ஷ்ன் மற்றும் அதிரடி கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
அந்த விதத்தில் இப்படத்தை படக்குழு வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதியில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இன்னும் இப்படம் வெளியாகி சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இதன் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.




இதையும் படிங்க: அதிரடி ஆக்ஷன் கதையில்… அசோக் செல்வன் – ப்ரீத்தி முகுந்தனின் அன்பில் அவன் பட ட்ரெய்லர் வெளியீடு!
கீர்த்தி சுரேஷின் டோரதி திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது:
இந்த டோரதி படமானது வித்தியாசமான ஆக்ஷன் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. சிறு பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படமானது பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளதாம். சமீபத்தில் லண்டனில் நடந்த திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட நிலையில், அங்குள்ள மக்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றிருந்ததாம்.
இதையும் படிங்க: அடுக்கடுக்காக டாஸ்க் கொடுத்த வினோத் பாபு.. அதிரடியாக மிரட்டிய மணிவண்ணன்.. பரபரப்பில் பிக் பாஸ்!
அந்த விதத்தில் வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதியில் இப்படம் வெளியாகிறது. அதை முன்னிட்டு இப்படத்தின் ட்ரெய்லர் நாளை (18/09/2026) மாலை 6 மணியளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
டோரதி திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி குறித்து கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட பதிவு:
Dorothy Trailer from Tomorrow 6pm ❤️#DorothyTrailer #DorothyFromSep25 #Dorothy pic.twitter.com/aMLiRX5OyC
— karthik subbaraj (@karthiksubbaraj) September 17, 2026
இந்த டோரதி படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ள நிலையில், இதுவரை இப்படத்திலிருந்து 2 பாடல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இன்னும் சில நாட்கள் மட்டுமே இப்படத்தின் வெளியீட்டிற்கு இருக்கும் நிலையில், ட்ரெய்லர் வெளியாக காத்திருக்கிறது. இந்நிலையில் நிச்சயம் இப்படம் மக்கள் மத்தியில் வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சிறு பட்ஜெட்டில் இப்படமானது உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதன் மீது எதிர்பார்ப்புகள் இருக்கிறது. அதனால் கீர்த்தி சுரேஷுக்கு இப்படம் வெற்றியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.