AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Dorothy: முத்துமணி…. கீர்த்தி சுரேஷின் டோரதி படத்தின் 2வது பாடல் வெளியானது!

Dorothy Movie Muthumani Song: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள புது படம்தான் டோரதி. 90ஸ் காலகட்ட கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு, இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். தற்போது இப்படத்திலிருந்து முத்துமணி என்ற 2வது பாடல் வெளியாகியுள்ளது.

Dorothy: முத்துமணி…. கீர்த்தி சுரேஷின் டோரதி படத்தின் 2வது பாடல் வெளியானது!
முத்துமணி பாடல்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 29 Aug 2026 15:54 PM IST

தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் கார்த்திக் சுப்புராஜ் (Karthik Subburaj). இவரின் இயக்கத்தில் சினிமாவில் இதுவரை மொத்தம் 9 திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த வரிசையில் 10வது படமாக உருவாகியிருப்பதுதான் டோரதி (Dorothy). கார்த்திக் சுப்புராஜ் இயக்க, அவரே இப்படத்தை தயாரித்தும் இருக்கிறார். இவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர்கள் ரிஷிகாந்த் (Rishikanth), சனந்த் (Sananth) மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh) போன்ற பிரபலங்கள் இனைந்து நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருக்கும் நிலையில், இப்படத்தின் பாடல்கள் எல்லாம் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே இப்படத்திலிருந்து “கல்யாண விருந்து” என்ற பாடலானது சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது இப்படத்திலிருந்து முத்துமணி (Muthumani) என்ற 2வது பாடலும் வெளியாகியுள்ளது. இது தற்போது இணையத்தில் பரவிவருகிறது.

இதையும் படிங்க: பக்கா பேமிலி படம்.. நயன்தாரா – கவினின் ஹாய் படம் நல்ல இருக்கிறதா இல்லையா? – விமர்சனங்கள் இதோ!

கார்த்திக் சுப்புராஜ் பகிர்ந்த டோரதி திரைப்படத்தின் 2வது பாடலான முத்துமணி லிரிக்கள் வீடியோ பதிவு:

இந்த டோரதி படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள படத்தை இளையராஜா மற்றும் சுவேதா மோகன் இணைந்து பாடியுள்ளனர். தற்போது இப்பாடலானது வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

டோரதி திரைப்படத்தின் சென்சார் அப்டேட்:

இந்த டோரதி படமானது 90ஸ் காலகட்டத்தில் நடக்கும் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் ரிஷிகாந்த் மற்றும் சனந்த் என இவர்கள் இவரையே சுற்றி அமைக்கப்பட்டுள்ளதாம். இதில் நடிகை கீர்த்தி சுரேஷும் மிக முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படமானது திரில்லர் மற்றும் கிராம கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ராக்கா படத்தில் அல்லு அர்ஜுன் எத்தனை வேடத்தில் நடிக்கிறார் தெரியுமா?

இப்படமானது 2026ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. அதை முன்னிட்டு இப்படத்தின் சென்சார் பணிகளும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்த படத்திற்கு சென்சார் குழு யு / ஏ தரச் சான்றிதழை பரிந்துரை செய்துள்ளாராம். இந்த படத்தின் பாடல்கள் தொடர்ந்து வெளியாகிவரும் நிலையில், விரைவில் ட்ரெய்லர் ரிலீஸ் தொடர்பான அப்டேட்டுகளும் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்திற்கு பின், இந்த டோரதி படமானது உருவாகியிருக்கும் நிலையில், இதன் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. மேலும் இப்படமும் கார்த்திக் சுப்புராஜுக்கு வெற்றியாக அமையும் என வட்டாரங்கள் கூறுகிறது.

Follow Us