Allu Arjun: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ராக்கா படத்தில் அல்லு அர்ஜுன் எத்தனை வேடத்தில் நடிக்கிறார் தெரியுமா?
Allu Arjuns Raaka: தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் இவர் நடித்துவரும் புது படம்தான் ராக்கா. இந்த படத்தின் ஷூட்டிங் பிரம்மாண்டமாக நடைபெற்றுவரும் நிலையில், இப்படத்தில் எத்தனை வேடத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கிறார் என்பது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.
டோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக இருந்துவருபவர் அல்லு அர்ஜுன் (Allu Arjun). இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் புஷ்பா 2 (Pushpa 2). இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் வெளியான நிலையில், உலகமெங்கும் பிரம்மாண்டமான வரவேற்பை பெற்றிருந்தார். இந்த படமானது கிட்டத்தட்ட ரூ 2000 கோடிகளுக்கு மேல் உலகமெங்கும் வசூல் செய்திருந்தது. இந்த படத்திற்கு பின் தமிழ் இயக்குநரின் இயக்கத்தில் இணைந்துள்ள புது படம்தான் ராக்கா (Raaka). இப்படமானது ஆரம்பத்தில் AA22 என்று அழைக்கப்பட்ட நிலையில், கடந்த 2026ம் ஆண்டு பிப்ரவரியில் இப்படத்தின் டைட்டில் ராகா என அறிவிக்கப்பட்டிருந்தது. இதை இயக்குநர் அட்லீ இயக்க, சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் கலாநிதிமாறன் தயாரிக்கிறார்.
இப்படமானது பான் இந்திய படமாக உருவாகிவரும் நிலையில், நடிகை தீபிகா படுகோன் அதில் நாயகியாக நடித்துவருகிறார். இப்படத்தின் நடிகர் அல்லு அர்ஜுன் நயாகனாக நடிக்கும் நிலையில், அவர் மொத்தம் எத்தனை வேடங்களில் நடிக்கிறார் என்பது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.




இதையும் படிங்க: கீர்த்தி சுரேஷின் டோரதி பட 2வது சிங்கிள் ரிலீஸ் எப்போது? அப்டேட் கொடுத்த இயக்குநர்!
ராக்கா திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் எத்தனை வேடத்தில் நடிக்கிறா தெரியுமா?:
நடிகர் அல்லு அர்ஜுன் இந்த படத்தில் முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் அவர் நெகடிவ் மற்றும் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அல்லு அர்ஜுன் மொத்தம் 3 வேடத்தில் நடிக்கிறாராம், அப்பா மற்றும் 2 மகன்களாக அல்லு அர்ஜுன் நடித்திருக்கிறாராம்.
இதையும் படிங்க: பக்கா பேமிலி படம்.. நயன்தாரா – கவினின் ஹாய் படம் நல்ல இருக்கிறதா இல்லையா? – விமர்சனங்கள் இதோ!
தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாம். மேலும் நடிகை தீபிகா படுகோன் இப்படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அல்லு அர்ஜுனின் ராக்கா திரைப்படம் குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:
As per a Telugu source,#AlluArjun is currently working on #Raaka. According to the latest reports, he is said to be playing three roles in the film — a father and his two sons. pic.twitter.com/rDHwTeCqxX
— Movie Tamil (@_MovieTamil) August 28, 2026
ராக்கா திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?:
ராக்கா படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துவரும் நிலையில், இப்படத்திலிருந்தது தீம் பாடல் மட்டுமே வெளியாகியிருக்கிறது. இந்த படமானது சிறப்பாக மற்றும் பிரம்மாண்ட உருவாகிவரும் நிலையில், வரும் 2027ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாக்குவதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.