Allu Arjun: இது ஒரு தமிழ் கிளாசிக்… புரிந்துகொள்பவர்களுக்கு ஒரு கவிதை – லோகேஷ் கனகராஜின் டிசி படத்தை பாராட்டிய அல்லு அர்ஜுன்!
Lokesh Kanagarajs DC Movie: அல்லு அர்ஜுன் தற்போது அட்லீயின் இயக்கத்தில் ராக்கா என்ற படத்தில் நடிக்கிறார். இதன் பின் லோகேஷ் கனகராஜின் AA23 படத்தில் இணைகிறார். அண்மையில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமான டிசி படத்தை பார்த்த அல்லு அர்ஜுன், அதை பாராட்டிய பதிவை வெளியிட்டுள்ளார்.
டோலிவுட் சினிமாவில் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் அல்லு அர்ஜுன் (Allu Arjun). இவரை ரசிகர்கள் ஐகானிக் ஸ்டார் (Iconic Star) என அழைக்கப்பட்டுவருகிறார். இவரின் நடிப்பில் இதுவரை மொத்தமாக 21 திரைப்படங்களுக்கும் மேல் வெளியாகியுள்ளது. இவரின் நடிப்பில் தற்போது ராக்கா (Rakaa) என்ற திரைப்படமானது உருவாக்கப்பட்டுவருகிறது. இதை தமிழ் இயக்குநர் அட்லீ குமார் (Atlee Kumar) இயக்க, சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் கலாநிதிமாறன் தயாரித்துவருகிறார். இந்த படமானது 2025ம் ஆண்டிலே அல்லு அர்ஜுனின் AA22 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதையடுத்து 2026ம் ஆண்டில் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் ராக்கா என்றும், படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.
இந்த படத்திற்கு பிறகு, தமிழ் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் (Lokesh Kanagaraj) இயக்கத்தில் AA23 என்ற படத்தில் இணைகிறார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் டிசி (DC) என்ற படத்தின் மூலமாக கதாயகனாக அறிமுகமாகியுள்ளார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டுவரும் நிலையில், அதை பார்த்த அல்லு அர்ஜுன் அதை பார்ட்டி பதிவை வெளியிட்டுள்ளார்.




இதையும் படிங்க : வெற்றிநடைபோடும் விஸ்வநாத் & சன்ஸ்… படக்குழு வெளியிட்ட போஸ்டர்
டிசி திரைப்படத்தை பாராட்டி எக்ஸ் பக்கத்தில் பதிவை வெளியிட்ட நடிகர் அல்லு அர்ஜுன்:
Watched #DC ! It’s a Tamil classic. Every film lover must watch it. It’s poetry for those who get it.
Congratulations to the entire #DC team. Highest respect to Director @ArunMatheswaran garu. @anirudhofficial absolute master booster! Technically brilliant.
All the artists are…— Allu Arjun (@alluarjun) August 17, 2026
அந்த பதிவில் அல்லு அர்ஜுன், “டிசி படத்தை பார்த்தேன், இரு ஒரு தமிழ் கிளாசிக், ஒவ்வொரு சினிமா ரசிகர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். புரிந்துகொள்பவர்களுக்கு இது ஒரு கவிதை. டிசி படத்திற்கின் முழு குழுவுக்கும் வாழ்த்துக்கள். இயக்குநர் அருண் மாதேஸ்வரன் அவர்களுக்கு மிகுந்த மரியாதை. அனிருத் ஒரு முழுமையான பூஸ்டர், தொழில்நுட்பம் ரீதியாக பிரமாதம். அனைத்து கலைஞர்களும் அருமை, குறிப்பாக வாமிகா கபி அவர்களும், நிச்சயமாக ஹீரோவும். மேலும் எனது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களே, எனக்கு மிகப்பெரிய ஆதரவு தூண்” என அதில் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சூர்யாவுடன் விரைவில் படம்.. வெளிப்படையாக சொன்ன இயக்குநர் திரிவிக்ரம்!
அல்லு அர்ஜுன் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி AA23 படம்:
அல்லு அர்ஜுன் தற்போது ராக்கா பட ஷூட்டிங்கில் இருக்கும் நிலையில், அதை முடித்த கையேடு லோகேஷ் கனகராஜின் AA23 படத்தில் இணைகிறார். இதை மைத்ரி மூவியே மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசமைக்கிறார். இந்த படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றிருந்த நிலையைக், அண்மையில் டிசி பட வரவேற்பை, AA23 படக்குழு கேக் வெட்டி கொண்டாடியிருந்தனர். இப்படத்தின் ஷூட்டிங் 2026ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது.