AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Suriya: தெலுங்கு ஆடியன்ஸ் ரொம்ப ஸ்பெஷல்.. விஸ்வநாத் & சன்ஸ் பட வெற்றி விழாவில் சூர்யா பேச்சு!

Suriya Thanks Telugu Fans: சூர்யாவின் நடிப்பில் 2026ம் ஆண்டில் வெளியான 2வது திரைப்படம்தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்த படமானது கடந்த 2026 ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியில்; உலகமெங்கும் வெளியாகியது. முதல் நாளிலே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், நேற்று (16/08/2026) வெற்றி விழா கொண்டாடப்பட்டது. அதில் சூர்யா தெலுங்கு ரசிகர்கள் குறித்து பேசியுள்ளார்.

Suriya: தெலுங்கு ஆடியன்ஸ் ரொம்ப ஸ்பெஷல்.. விஸ்வநாத் & சன்ஸ் பட வெற்றி விழாவில் சூர்யா பேச்சு!
சூர்யா Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 16 Aug 2026 16:17 PM IST

ரசிகர்களால் தி ஒன் என அழைக்கப்பட்டுவருபவர் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்ட படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் 2026ம் ஆண்டில் கருப்பு (Karuppu) படம் முதலில் வெளியாகி இவருக்கு மாபெரும் வரவேற்பை கொடுத்தாதது. இதற்கு பின் வெளியான 2வது திரைப்படம்தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath and Sons). இதை தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்க, நேரடி தமிழ் திரைப்படமாக வெளியாகியுள்ளது. இதை தயாரிப்பாளர் நாக வம்சி (Naga Vamsi) தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் குமார் (GV Prakash Kumar) இசையமைத்துள்ளார். பேமிலி பொழுதுபோக்கு கதைக்களத்தில் உருவாக்கப்பட்டிருந்த நிலையில், 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி அன்று வெளியாகியிருந்தது.

அந்த வகையில் முதல் நாளிலே சுமார் ரூ 50 கோடிகளுக்கு மேல் வசூல் சசெய்திருந்ததால். அந்தக வகையில், நேற்று, (15/08/2026) வெற்றி விழா கொண்டாடப்பட்டிருந்தது. அதில் பேசிய சூர்யா, தெலுங்கு ரசிகர்கள் குறித்து புகழ்ந்து பேசியிருந்தார்.

இதையும் படிங்க: ஸாம்பி கதையில்… பிரபு தேவா மற்றும் வடிவேலுவின் ‘பேங் பேங்’ படத்தின் டீசர் இணையத்தில் வைரல்!

தெலுங்கு ரசிகர்கள் குறித்து நெகிழ்ச்சியாக பேசிய சூர்யா:

அந்த நிகழ்ச்சியின்போது பேசிய சூர்யா, “இப்படம் வெளியான முதல் நாளிலே தயாரிப்பாளார்கள் மற்றும் விநியோகஸ்தரர்கள் கூறினார்கள், முதல் நாளையே இரட்டை இலக்க வசூல் இருந்ததாக. நான் இந்த நேரத்தில், தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். எல்லா மொழிகளிலிருந்து எனக்கு அன்புகள் கிடைக்கிறது. ஆனால் தெலுங்கில் எனக்கு அதிலிருந்து 25 மடங்கு அதிகமாக கிடைக்கிறது.

இதையும் படிங்க: பிரபாஸின் ஃபௌசி படத்தின் ரிலீஸ் எப்போது? வெளியானது அப்டேட்

நாங்கள் தொடங்கியபோது இந்த வகை படங்கள் ஒரு டிரெண்டாக இல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் ஆக்‌ஷன் படங்கள் எப்போதும் என்றும் பசுமையாக நிலைத்திருக்கும். சமூக ஊடகங்களில் இது போன்ற அழகான உரையாடல்களைக் கேட்பதும், எல்லா மொழி பேசும் ரசிகர்களும் இந்தப் படத்தை விரும்பி வரவேற்பதைப் பார்ப்பதும் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் பயணத்தை இவ்வளவு சிறப்பானதாக மாற்றிய உங்கள் அனைவருக்கும் நன்றி” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட வெற்றி விழாவில் சூர்யா பேசியது தொடர்பான வீடியோ பதிவு:

சூர்யா மற்றும் மமிதா பைஜூவின் காம்போவில் வெளியான இந்த திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டுவருகிறது. இந்த படத்தில் சூர்யா மற்றும் மமிதா இருவரின் நடிப்பும் சிறப்பாக அமைந்த நிலையில், 2வது நாள் முடிவிலே சுமார் ரூ 100 கோடி வசூலை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us