தவெக மா.செ.வுக்கு என் மனைவியுடன் தொடர்பு.. கதறும் கணவன்.. திருப்பி அடித்த மனைவி.. திருவள்ளூரில் பரபரப்பு!
Thiruvallur Crime : திருவள்ளூர் மாவட்டத்தில் கணவனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், மனைவிக்கு தவெக மாவட்ட செயலாளருடன் தொடர்பு இருப்பதாகவும் இருவரும் மாறி மாறி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள தெக்கலூர் பகுதியை சேர்ந்தவர் பிரதாப். இவரது மனைவி தீபா. இவர்கள் இருவருக்கும் கடந்த 2018- ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு 6 வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில், பிரதாப்புக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாலும், தீபாவுக்கு மற்றொரு நபருடன் தொடர்பு இருப்பதாகவும் கூறி இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தீபா தனது கணவர் பிரதாப்பை பிரிந்து தனது மகனுடன் திருத்தணியில் உள்ள தனது தாய் வீட்டில் 4 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இந்த நிலையில் தீபா, தவெக மாவட்ட செயலாளருடன் அடிக்கடி வெளியே சென்று வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தீபாவின் கணவர் பிரதாப்புக்கு தெரிய வந்துள்ளது.
தவெக மா.செ.வுடன் தீபா எடுத்த புகைப்படங்கள்
அத்துடன், தவெக மாவட்ட செயலாளர், தீபா வசித்து வரும் வீட்டுக்கு சென்று வருவதும், அவருடன் சென்னை மெரினா பீச் திருவண்ணாமலை, திருப்பதி கோவில் ஆகியவற்றுக்கு இருவரும் சென்று வந்ததும், அங்கு அவர்கள் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆகியவை பிரதாப்புக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தவெக மாவட்ட செயலாளருடன் திருப்பதி கோவிலுக்கு தீபா சென்று இருப்பதாக பிரதாப்புக்கு தெரியவந்துள்ளது. இதை அடுத்து, திருப்பதிக்கு சென்ற பிரதாப், அங்கு தனது மனைவியுடன் இருந்த தவெக மாவட்ட செயலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் படிக்க: திருச்சி அருகே கோர விபத்து.. லாரி – கார் பயங்கர மோதல்… சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இருவர் மரணம்!




மா.செ.வுக்கும், நபருக்கும் கைகலப்பு
இதில், இருவர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். அப்போது, தீபாவும், மாவட்ட செயலாளரும் இணைந்து பிரதாப்பை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பிரதாப் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். இதே போல, தீபாவும் எஸ். பி.யிடம் புகார் அளித்துள்ளார். அதில், தனது கணவர் பிரதாப்புக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறேன். நான் நண்பர்களுடன் பேசுவதை தவறாக சித்தரித்து அவர் பேசி வருகிறார்.
தன்னையும், மகனையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டல்
திருமணத்தின் போது நான் அணிந்திருந்த 60 பவுன் நகைகளை விற்று பெண்களிடம் உல்லாசமாக இருந்துள்ளார். தவெக மாவட்ட செயலாளருக்கும், எனக்கும் எந்த தவறான உறவும் கிடையாது. அவர் என்னுடைய குடும்ப நண்பர். 50 பவுன் நகை வேண்டும் என்றும், இல்லையெனில் என்னையும், எனது மகனையும் கொலை செய்து விடுவதாக பிரதாப் மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: போளூரில் பெருஞ்சோகம்.. கிணறு தோண்டியபோது மண் சரிந்து விபத்து.. இருவர் மண்ணோடு மண்ணாக புதைந்து உயிரிழப்பு!