AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் அமைச்சர் செம்மலை பரபரப்பு விளக்கம்!

AIADMK Former Minister Semmalai : அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது ஏன் என்பதற்கான காரணத்தை முன்னாள் அமைச்சர் செம்மலை விளக்கி உள்ளார். அவர் கூறிய காரணத்தை இந்தப் பதிவில் விரிவாக பார்த்து தெரிந்து கொள்ளலாம் .

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் அமைச்சர் செம்மலை பரபரப்பு விளக்கம்!
தவெகவில் இணைந்த செம்மலை.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 01 Oct 2026 18:45 PM IST

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செம்மலை நேற்று மதுராந்தகத்தில் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். இதைத் தொடர்ந்து, சேலத்தில் இன்று வியாழக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக வெற்றி கழகத்தில் நான் காலதாமதமாக இணைந்திருந்தாலும், ஏற்கனவே எடுத்த முடிவின் அடிப்படையிலேயே இந்த கட்சியில் இணைந்துள்ளேன். தற்போதைய காலகட்டத்தில் அறிஞர் அண்ணா மற்றும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆகியோரை தனது வழிகாட்டி தலைவராக என்று பிரகடனப்படுத்தினாரோ அன்றைக்கே அவரால் நான் ஈர்க்கப்பட்டேன். அதிமுகவிலிருந்து விலகியதற்கு காரணம் கடந்த 2017- ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்த இயக்கத்திற்கு சரியான தலைமை அமையவில்லை. இது மட்டும் இல்லை அதிமுக பழனிசாமிக்கு சொந்தமான லிமிடெட் நிறுவனமாக மாறிவிட்டது.

அதிமுக கூடாரம் காலியாகி விடும்

அதிமுகவில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லாமல் உள்ளது. அதன் காரணமாகவே பலரும் அதிமுகவில் இருந்து விலகி வருகின்றனர். அந்த கட்சியில் இருப்பவர்களும் தங்களது உழைப்பு வீணாகிறதே என்ற மனநிலையில் இருந்து வருகின்றனர். அவர்களும் வெகு விரைவில் அதிமுகவிலிருந்து விலகி வேறு கட்சியில் இணைந்து விடுவார்கள். அப்போது, அதிமுகவின் கூடாரம் காலியாகி விடும். குளம் வற்றிய பிறகு கொக்குக்கு என்ன வேலை என்ற நிலையம் பழனிச்சாமி நிலையாக இருக்கும்.

மேலும் படிக்க: திருச்சி அருகே கோர விபத்து.. லாரி – கார் பயங்கர மோதல்… சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இருவர் மரணம்!

முதல்வர் ஜோசப் விஜய்யின் கைகளில் எதிர்காலம்

புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் உண்மையான தொண்டர்களுக்கு வெற்றி தலைவர் முதல்வர் விஜயின் அணுகுமுறை, ஆட்சி முறை பிடித்துள்ளது. எனவே, இனி எதிர்காலம் தமிழக வெற்றிக் கழக தலைவர், வெற்றி தலைவர் விஜயின் கைகளில் தான் உள்ளது. மக்கள் மனங்களை வென்றது அவர் செய்த மிகப்பெரிய சாதனையாக கருதுகிறேன். அரசியல் கட்சித் தலைவர்கள் சாதிக்க முடியாத அரசியல் பண பலமோ, மதம் மற்றும் ஜாதி தாக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் தான் முதல்வர் விஜய்.

விஜய் தலைமையை ஏற்க என்ன காரணம்

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யால் மட்டுமே ஆட்சி முறையில் ஊழலை ஒழிப்பேன், லஞ்சம் முறை கட்டுப்படுத்துவேன். கேடுகளை களைவேன் என்று தைரியமாக சொல்ல முடியும். மற்ற தலைவர்களால் இது போன்ற வாக்குறுதிகளை அளிக்க முடியாது. இந்த காரணங்கள் தான் தமிழக வெற்றிக் கழக தலைவர் ஜோசப் விஜய் தலைமையை ஏற்றுக் கொண்டதற்கு காரணமாகும். முதல்வர் விஜய் ஒரு நல்ல மனிதர். தன்னலமற்ற தலைவர். தலைமைக்கான பண்புகள் நிறைந்த தலைவர் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: தஞ்சாவூரில் சத்தமின்றி நடந்த பெரிய ஆபரேஷன்.. கிலாபத் இயக்கத்தில் தொடர்புடைய 6 பேர் கைது.. எஸ்ஐடி குழு அதிரடி!

Follow Us