Bang Bang: ஸாம்பி கதையில்… பிரபு தேவா மற்றும் வடிவேலுவின் ‘பேங் பேங்’ படத்தின் டீசர் இணையத்தில் வைரல்!
Bang Bang Teaser: தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களாக இருந்துவருபவர்கள் பிரபு தேவா மற்றும் வடிவேலு. இவர்கள் இருவரும் முன்பே படங்களில் இணைந்து நடித்திருந்த நிலையில், மீண்டும் இணைந்துள்ளது. அந்த புதிய திரைப்படம்தான் பேங் பேங். ஸாம்பி கதைக்களத்தில் இந்த படமானது உருவாக்கப்பட்டுள்ள அந்நிலையில், இப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
நடிகர் பிரபு தேவா (Prabhu Deva) தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் படங்களில் நடித்துவருகிறார். அந்த வகையில் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் தமிழில் இவர் நடித்துவரும் புதிய திரைப்படம்தான் பேங் பேங் (Bang Bang). இந்த படத்தை அறிமுக இயக்குநர் சாம் ரோட்ரிக்ஸ் (Sam Rodrigues) இயக்க, கண்ணன் ரவி குரூப்ஸ் நிறுவனமானது மிக பிரம்மாண்டமாக தயாரித்துவருகிறது. இந்த படமானது ஸாம்பி கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுவருகிறது. இதில் பிரபு தேவா மற்றும் வடிவேலு (Vadivelu) இணைந்து நடித்துள்ளார்கள். மேலும் கொம்புசீவி படத்தில் நடித்திருந்த நடிகை தாரணிகா முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் இன்னொரு நடிகையும் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar raja) இசையமைத்துள்ள நிலையில், படத்தின் மீது ஆர்வம் அதிகமாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்ட நிலையில், இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: குடும்பங்கள் கொண்டாடும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்.. 2வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
வடிவேலு மற்றும் பிரபு தேவாவின் பேங் பேங் படத்தின் டீசர் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:
Guns. Ammos. Apocalypse! 🔥
The Z-Verse has entered full-blown madness.#BangBang Teaser streaming now!
Produced by #KannanRavi
Co Produced by #DeepakRavi@PDdancing x #VadiveluWritten & Directed by #SamRodrigues
A @thisisysr Musical pic.twitter.com/70pIgstEf6
— KANNAN RAVI GROUPS (@KRGOffl) August 16, 2026
வடிவேலு மற்றும் பிரபு தேவாவின் பேங் பேங் பட டீசர் எப்படி இருக்கு:
இந்த படத்திலும் பிரபு தேவா மற்றும் வடிவேலு இணைந்து நடித்துள்ளார்கள். இந்த படமானது ஸாம்பி, காமெடி மற்றும் ஆக்ஷன் போன்ற கதைக்களத்தில் உருவாகியிருப்பதாக தெரிகிறது. இந்த படத்தில் பிரபு தேவா மற்றும் வடிவேலுவின் காம்போவும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த படமானது சிறப்பாக உருவாகியுள்ள நிலையில், 2026ம் ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டிவி ஷோவில் தொகுப்பாளராக களமிறங்கிய சமந்தா.. எந்த நிகழ்ச்சி தெரியுமா?
பிரபு தேவா மற்றும் வடிவேலுவின் காம்போ
வடிவேலு மற்றும் பிரபு தேவா இருவரும் 90ஸ் காலகட்டத்தில் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் காதலன் (1994), ராசய்யா (1995) மற்றும் மனதை திருடிவிட்டாய் (2001) போன்ற 3 படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள். மேலும் தற்போது 4வது முறையாக பேங் பேங் என்ற படத்தில் இணைந்துள்ளர்கள்கள். இது 2026ம் ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.