தனுஷ் 56 படத்தின் படப்பிடிப்பிற்காக மதுரை சென்ற தனுஷ்… வைரலாகும் வீடியோ!
Dhanush heads to Madurai for the shoot of his 56th film | நடிகர் தனுஷ் தற்போது தனது 56-வது படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். இவர் தற்போது படப்பிடிப்பிற்காக மதுரை சென்றுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் (Dhanush). இவரது நடிப்பில் தமிழ் மொழியில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் மொழியில் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளிலும் தொடர்ந்து படங்களில் நடித்து பிசியான நாயகனாக வலம் வருகிறார் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து தமிழ் மொழியில் இரண்டு படங்கள் இதுவரை திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த ஆண்டின் தொடக்கத்தில் கர படம் திரையரங்குகளில் வெளியானது. அதனைத் தொடர்ந்து கடந்த 20-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு ஓ.எம் படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் ரசிகர்களிடையே தற்போது வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இந்த ஓஎம் படத்தினை தொடர்ந்து நடிகர் தனுஷ் தனது அடுத்தடுத்தப் படங்களில் கமிட்டாகி தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படத்திற்கு தற்காலிகமாக தனுஷ் 56 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பூஜை கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைப்பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.




தனுஷ் 56 படத்தின் படப்பிடிப்பிற்காக மதுரை சென்ற தனுஷ்:
இந்த தனுஷ் 56 படத்தினை லப்பர் பந்து பட புகழ் இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து எழுதி இயக்கி வருகிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கும் நிலையில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இந்தப் படத்திற்கு இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிகர்கள் ப்ரீத்தி முகுந்தன், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா மற்றும் விஜய் குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர்.
கடந்த சில நாட்களாக ஓஎம் படத்தின் ரிலீஸ் பணிகளில் பிசியாக இருந்த நடிகர் தனுஷ் தற்போது மீண்டும் தனது 56-வது படத்தின் படப்பிடிப்பு பணிகளில் கலந்துகொள்ள உள்ளார். இதற்காக தற்போது சென்னையில் இருந்து மதுரைக்கு வந்துள்ள நடிகர் தனுஷை அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… இசை, காதல் மற்றும் ஒரு நீண்ட பயணம்… அஜித்துடன் காரில் பயணம் சென்ற ஷாலினி – வைரலாகும் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Reception for #Dhanush in Madurai, where he arrived for the next schedule of #D56..🔥
https://t.co/OuQyBsFt9y— Laxmi Kanth (@iammoviebuff007) November 22, 2026
Also Read… ஹாலிடே இல்ல ஆனால்.. தனுஷின் ஓ.எம் திரைப்பட முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? – அறிவிப்பு இதோ!