ஷூட்டிங்கை நிறைவு செய்தது பிரபு தேவா – வடிவேலுவின் பேங் பேங் படக்குழு
Bang Bang Movie Team Wraps Up Shooting | நடிகர்கள் பிரபு தேவா மற்றும் வடிவேலுவின் வெற்றிக் கூட்டணி பல ஆண்டுகளுக்குப் பிறகு பேங் பேங் படத்தில் இணைந்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு வீடியோ வெளியிட்டு உள்ளது.
தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய சினிமாவில் நாயகன் மற்றும் காமெடியன் என குறிப்பிட்ட சிலரின் காம்போவில் வெளியான படங்கள் எத்தனை வருடங்கள் ஆனாலும் அதனை ரசிகர்கள் கொண்டாடத் தவறியதில்லை. அப்படி ரசிகர்களால் தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்ட காம்போ என்றால அது நடிகர்கள் பிரபு தேவா மற்றும் வடிவேலுவின் காம்போ என்று சொல்லலாம். இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படங்கள் எப்படி இருந்தாலும் காமெடிக் காட்சிகள் தற்போது வரை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. 90களில் இவர்கள் இருவரின் நடிப்பில் வெளியான படங்களை ரசிகர்கள் தற்போதும் பார்த்து மகிழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் சூழலில் நடிகர் பிரபு தேவா நடிப்பதை விட அதிக அளவில் நடத்தில் கவனம் செலுத்த நடிகர் வடிவேலு கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து படங்களில் நடிக்காமல் இருந்தார்.
இந்த நிலையில் தற்போது பிரபு தேவா மற்றும் வடிவேலு இருவரும் மீண்டும் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பிரபு தேவா மற்றும் வடிவேலு இருவரும் இணைந்து மீண்டும் படத்தில் நடிக்க உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.




ஷூட்டிங்கை நிறைவு செய்தது பிரபு தேவா – வடிவேலுவின் பேங் பேங் டீம்:
பேங் பேங் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை இயக்குநர் சாம் ரோட்ரிக்ஸ் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் பிரபு தேவா மற்றும் வடிவேலு உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். தமிழில் ஜாம்பியை வைத்து காமெடிப் படமாக உருவாகி வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்தப் படத்தை தயாரிப்பாளர் கண்ணன் ரவி கேஆர்ஜி கண்ணன் ரவி என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரித்து உள்ள நிலையில் படம் இந்த 2026-ம் ஆண்டின் இறுதிக்குள் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… கருப்பு முதல் அதிரடி வரை… தென்னிந்திய சினிமாவில் வரிசைக்கட்டும் படங்களின் லிஸ்ட் இதோ
பேங் பேங் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
BANG! BANG! And it’s Wrap 🔥
Produced by #KRGOffl #KannanRavi
Co-Produced by #DeepakRavi
Starring @PDdancing x #Vadivelu
Music by @thisisysr
Directed by #SamRodrigues#KannanRaviGroups pic.twitter.com/kSKRJ9dZSR— KANNAN RAVI GROUPS (@KRGOffl) May 14, 2026
Also Read… தமிழில் ஒரே படத்தின் மூலம் ஓஹோன்னு வரவேற்பு.. இந்த சிறுமி எந்த நடிகைனு தெரியுமா?