AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

DC Movie: லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்த ‘டிசி’ பட ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? – வெளியான அறிவிப்பு இதோ!

DC Movie Trailer Release Update: தமிழ் சினிமாவில் இயக்குநராக நுழைந்து, தற்போது கதாநாயகனாக படத்தில் நடித்திருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவரின் நடிப்பில் தயாராகியுள்ள முதல் படம்தான் டிசி. அந்த வகையில் இன்னும் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாத நிலையில், இதன் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

DC Movie: லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்த ‘டிசி’ பட ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? – வெளியான அறிவிப்பு இதோ!
டிசி திரைப்பட டிரெய்லர் அப்டேட்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 13 May 2026 18:46 PM IST

கடந்த 2017ம் ஆண்டில் வெளியான மாநகரம் (Managaram) என்ற படத்தின் மூலம், இயக்குநராக நுழைந்தவர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj). இதையடுத்து கார்த்தியின் நடிப்பில் வெளியான கைதி (kaithi) என்ற படத்தை இயக்கி மக்களிடையே பிரபலமானார். இந்த படமானது இவருக்கு வெற்றி திரைப்படமாக அமைய, தனது 3வது படத்தையே முதல்வர் தளபதி விஜயை (CM Thalapathy VIjay) வைத்து இயக்கியிருந்தார். அந்த படம்தான் மாஸ்டர் (Master). இந்த படமானது கொரோனா காலகட்டத்தில் வெளியாகியிருந்த நிலையில், திரையரங்க உரிமையாளர்களுக்கு லாபம் தரும் படமாக அமைந்தது. அந்த வகையில் இதையடுத்து கமல்ஹாசன் (Kamal Haasan) முதல் ரஜினிகாந்த் (Rajinikanth) வரை பல்வேறு நடிகர்களை கொண்டு படங்களை இயக்கியுள்ளார். இப்படங்களை தொடர்ந்து தற்போது சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். இயக்குநர் அருண் மாதேஸ்வரனின்(Arun Matheswaran) இயக்கத்தில், “டிசி” (DC) என்ற படத்தில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்துவந்த நிலையில், அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை வாமிகா கபி (Wamiqa Kabhi) நடித்துள்ளார்.

மேலும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அந்த வகையில் இப்படத்தின் ட்ரெய்லர் கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்தது. அதை தொடர்ந்து, ரசிகர்களின் பார்வைக்காக எப்போது யூடியூப்பில் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வரும் 2026 மே 15ம் தேதியில் மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திரைப்பட நடிகராக மட்டுமே பார்க்கக்கூடாது… அவரை நினைத்து பெருமையாக இருக்கிறது – கமல்ஹாசன் பேச்சு!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்த டிசி படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இப்படத்தில் “தேவதாஸ்” என்ற வேடத்திலும், அவருக்கு ஜோடியான வாமிகா கபி “சந்திரா” என்ற வேடத்திலும் நடித்துள்ளார். இவர்கள் இருவரின் பெயரைதான் டிசி என படத்தின் டைட்டிலாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் மிகவும் முக்கியமான வேடத்தில் லப்பர் பந்து பட நடிகை சஞ்சனா கிருஷ்ணமுர்த்தியும் நடித்துள்ளார். இந்த் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க, சன் பிக்ச்சர்ஸ் நிறுவனமானது சிறப்பாக த்யாரித்துவருகிறது. மேலும் இதற்க்கு லோகேஷ் கனகராஜின் நண்பரும், இசையமைப்பாளருமான அனிருத் இசையமைத்துள்ளார்.

இதையும் படிங்க: வேலும் மயிலும்.. சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் முதல் இன்டீ பாடல் வெளியானது!

இப்படமானது லோகேஷ் ஹீரோவாக நடித்திருக்கும் முதல் பாடம் என்ற நிலையில், அவரின் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்ற நிலையில், அதற்கு முன்னே படக்குழு ட்ரெய்லரை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. அண்ட் வகையில் இப்படத்தை வரும் 2026 மே இறுதியில் அல்லது ஜூன் தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டை தொடர்ந்து படத்தின் அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக வெளியாகும் என கூறப்படுகிறது.

Follow Us