உங்களுக்குக் கொடுக்கக்கூடிய வாக்குறுதி இதுதான்.. கருப்பு படத்தின் கதை குறித்து ஓபனாக சொன்ன சூர்யா!
Suriya About Karuppu First Half And Second Half: தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து சினிமாவில் கதாநாயகனாகவே நடித்துவருபவர் சூர்யா. இவரின் கருப்பு திரைப்படமானது 2026 மே 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. அந்த வகையில், கருப்பு திரைப்படத்தின் கதைக்களம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து சூர்யா வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
2026ம் ஆண்டில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டுவந்த திரைப்படம்தான் கருப்பு (Karuppu). இதை நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji) இயக்கியுள்ள நிலையில், படத்தில் சூர்யா (Suriya) கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை திரிஷா (Trisha) நடித்துள்ளார். இந்த படமானது முழுக்க நீதிமன்றத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் சூர்யா. திரிஷா உள்ளிட்ட பிரபலங்கள் வழக்கறிஞராக நடித்துள்ளனர். இந்த படமானது நீதிமன்றத்தில் நடக்கும், தவறுகளை தகர்க்க தெய்வீக சக்தி வருவதை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் ஆர்.எஸ். பிரபு தயாரிக்க, இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், இன்னும் இரு நாட்களில் உலகமெங்கும் வெளியாக தயாராகியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த தெலுங்கு ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் சூர்யா கலந்துகொண்டார். அப்போது அந்த மேடையில்பேசிய அவர், கருப்பு படம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: கருப்பு பட நிகழ்ச்சியில் சூர்யாவின் காலில் விழுந்த ரசிகர்.. அடுத்த நொடியே அவர் செய்த விஷயம் – வைரலாகும் வீடியோ!
கருப்பு படம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து சூர்யா பேசிய பதிவு:
#Karuppu First Half will be a nice Emotional Courtroom drama.. But Second Half will be full of theatrical moments.. Mass masala moments.. Full Humour.. Full fun will be there.. That’s the promise we can give you bef the release..💥 – #Suriya 🤝 pic.twitter.com/ls3WiQUgir
— Laxmi Kanth (@iammoviebuff007) May 11, 2026
அந்த நிகழ்ச்சியின்போது சூர்யா பேசுகையில், ” கருப்பு திரைப்படத்தின் முதல் பாதி ஒரு நல்ல உணர்ச்சிபூர்வமான நீதிமன்ற கதைக்களத்தில் இருக்கும். ஆனால் இரண்டாம் பாடகி முழுவதும், ஆக்ஷ்ன் டிராமா தருணங்கள், மாஸ் மசாலா தருணங்கள், முழு நகைச்சுவை, முழு வேடிக்கை நிறைந்திருக்கும். இந்த கருப்பு படம் வெளியாக்குவதற்கு முன், எங்களால் உங்களுக்கு கொடுக்கக்கூடிய வாக்குறுதி இதுதான்” என அதில் அவர் வெளிப்படையாக பேசியிருந்தார். இதுகுறித்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: கருப்பு படத்தை சூர்யா அண்ணாவால் மட்டுமே பண்ணமுடியும் – நடிகர் கார்த்தி புகழாரம்
கருப்பு படத்திற்கு சென்சார் குழு யு/ஏ தரச் சான்றிதழை கொடுத்திருக்கும் நிலையில், இதை 13+ வயதிற்கு மேற்பட்ட நபர்களே திரையரங்குகளுக்கு சென்று பார்க்கமுடியும். இப்படம் முழுக்க மாஸ் கமர்ஷியல் கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. இப்படமானது வரும் 2026 மே 14ம் தேதியில் வெளியாகும் நிலையில், நிச்சயம் மக்களிடையே வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.