AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கருப்பு பட நிகழ்ச்சியில் சூர்யாவின் காலில் விழுந்த ரசிகர்.. அடுத்த நொடியே அவர் செய்த விஷயம் – வைரலாகும் வீடியோ!

Suriyas Karuppu Pre-release Event : சூர்யாவின் நடிப்பில் கருப்பு திரைப்படமானது வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது. இந்நிலையில் நேற்று (11/05/2026) தெலுங்கு ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றிருந்தது. அந்த நிகழ்ச்சியின் மேடையில் சூர்யாவின் ரசிகர் ஒருவர் மேடையில் செய்த விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

கருப்பு பட நிகழ்ச்சியில் சூர்யாவின் காலில் விழுந்த ரசிகர்.. அடுத்த நொடியே அவர் செய்த விஷயம் – வைரலாகும் வீடியோ!
சூர்யா ரசிகரின் வைரல் வீடியோImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 12 May 2026 15:01 PM IST

தமிழ் சினிமாவில் லீட் நடிகராக தொடர்ந்து திரைப்படங்களில் நடித்தவருபவர் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில் 2026ம் ஆண்டில் வெளியாக தயாராகியுள்ள படம்தான் கருப்பு (Karuppu). இந்த படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்துள்ளார். மேலும் இப்படத்தை நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji) இயக்கியுள்ள நிலையில், இதில் அவரும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படமானது முற்றிலும் ஆக்ஷன், அதிரடி, நீதி மற்றும் தெய்வீகம் போன்ற கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இந்த படமானது வரும் 2026 மே 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக தயாராகியுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது.

மேலும் நேற்று 2026 மே 11ம் தேதியில் தெலுங்கானாவில், கருப்பு பட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றிருந்தது. அந்த நிகழ்ச்சியின்போது சூர்யா மேடையில் பேசிக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ரசிகர் செய்த விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது அது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: அடுத்த வாரம் தொடங்கும் சேயோன் படத்தின் ஷூட்டிங்… ரிலீஸ் எப்போது தெரியுமா?

கருப்பு பட தெலுங்கு ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியின்போது ரசிகர் ஒருவர் செய்த செயல் தொடர்பாக வைரலாகும் வீடியோ:

கருப்பு தெலுங்கு ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியின்போது நடிகர் சூர்யா, கார்த்தி போன்றவர்கள் மேடையில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அந்த வகையில் திடீரென ரசிகர் ஒருவர், சூர்யாவை நோக்கி வேகமாக வந்தார். ஒட்டுமொத்த ரசிகர்களும் ஷாக். வேகமான வந்த ரசிகர் ஒருவர், சூர்யாவுடன் புகைப்படம் எடுக்கவேண்டும் என்று அவரின் காலில் வந்து விழுந்தார். இதனை பார்த்த பவுன்சர்கள் அந்த ரசிகரை பிடித்து இழுத்தனர், உடனே சூர்யா அவர்களை தடுத்து, அந்த ரசிகருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இது தொடர்பான வீடியோ தற்போது ஒட்டுமொத்த சூர்யா ரசிகர்கள் மத்தியிலும் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: விஜய் குறித்த செய்தியாளரின் கேள்விக்கு கையெடுத்து கும்பிட்டு சென்ற ரஜினிகாந்த்

இந்த கருப்பு திரைப்படமானது முற்றிலும் ஆக்ஷன் அதிரடி போன்ற கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. இந்த படமானது கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக தயாராகிவந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தற்போது இப்படத்தின் ப்ரீ புக்கிங் நடைபெற்றுவரும் நிலையில், திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us