AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

10 ஆண்டுகளுக்கு முந்தைய ராஷ்மிகாவின் கமெண்ட்… தற்போது பதிலளித்த யாஷ்!

Actors Yash and Rashmika news | தென்னிந்திய மொழிகளில் பிரபல நாயகனாக வலம் வருபவர் நடிகர் யாஷ். இவர் குறித்து பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கமெண்டை தெரிவித்துள்ளார். இந்த கமெண்டிற்கு யாஷ் தற்போது அளித்த பதில் வைரலாகி வருகின்றது.

10 ஆண்டுகளுக்கு முந்தைய ராஷ்மிகாவின் கமெண்ட்… தற்போது பதிலளித்த யாஷ்!
ராஷ்மிகா மந்தனா - யாஷ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Aug 2026 11:59 AM IST

தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் யாஷ். இவரது நடிப்பில் கன்னட மொழியில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து கன்னட மொழியில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் யாஷ்  நடிப்பில் இறுதியாக வெளியான கேஜிஎஃப் முதல் பாகம் மற்றும் கேஜிஎஃப் இரண்டாம் பாகம் என இரண்டு பாகங்களும் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் யாஷ் உலகம் முழுவதும் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானார். இதனைத் தொடர்ந்து நடிகர் யாஷ் நடிப்பில் தற்போது வெளியாக உள்ள படம் டாக்ஸிக். இந்தப் படம் வருகின்ற 28-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையர்ங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தின் வெளியீட்டிற்கான பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படக்குழுவினர் மற்றும் நாயகன் தொடர்ந்து பேட்டிகளை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் யாஷ் சமீபத்திய பேட்டியில் தன்மீது வைக்கப்பட்டுள்ள விமர்சனங்கள் மற்றும் கமெண்ட்ஸ்களை குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

10 ஆண்டுகளுக்கு முந்தைய ராஷ்மிகாவின் கமெண்ட்டிற்கு பதிலளித்த யாஷ்:

அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நடிகை ராஷ்மிகா மந்தனா நடிகர் யாஷ் குறித்து பேசுகையில் ’மிஸ்டர் ஷோ ஆஃப்’ என்று தெரிவித்து இருந்தார். இது குறித்து தற்போது பேசிய நடிகர் யாஷ் பேசியபோது மற்றவர்களின் தனிப்பட்ட கருத்து தன்னை ஒருபோதும் பாதிக்காது என்றும் இப்படியான விமர்சனங்களை கடந்து நமது முன்னேற்ற பாதையை மட்டுமே நோக்கிச் செல்ல வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

Also Read… ஒவ்வொரு மூச்சிலும் சுதந்திரம்… ஒவ்வொரு இதயத்திலும் பெருமிதம்… ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட தர்மன் படக்குழு

மேலும் துரந்தர் படத்தின் வெளியீட்டிற்கு பயந்தே யாஷ் தனது டாக்ஸிக் படத்தின் வெளியீட்டை ஒத்தி வைத்ததாக நெட்டிசன்கள் கிண்டலடித்ததற்கு பதிலளித்த யாஷ்,படம் 100 முதல் 200 கோடி ரூபாய் வரை குறைவாக வசூலித்தால் அது என்னைப் பாதிக்கும் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் அப்படி இல்லை! ஆரம்பத்தில் எங்களிடம் எதுவும் இல்லை. இப்போது நம்மிடம் இருப்பதெல்லாம் ஒரு கூடுதல் லாபமே. அதிலிருந்து எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டாலும், கையில் ஒரு தொகை இருக்கவே செய்யும். நான் உருவாக்கும் படைப்பு தரமற்றதாக அமைந்துவிடக்கூடாது என்பதுதான் என் கவலை என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

Also Read… பந்தம் என்ன சொந்தம் என்ன… வழி தவறிய மம்முட்டிக்கு உதவிய நபர் – வைரலாகும் வீடியோ

Follow Us