விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட ரிலீஸ்.. திருப்பதியில் மொட்டையடித்த இயக்குநர் வெங்கி அட்லூரி!
Director Venky Atluri: தெலுங்கு சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் வெங்கி அட்லூரி. இவரின் இயக்கத்தில் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமானது நாளை (14/08/2026) வெளியாகிறது. அதை முன்னிட்டு, இன்று (13/08/2026) இயக்குநர் வெங்கி அட்லூரி திருப்பதியில் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார்.
டோலிவுட் இயக்குநர் வெங்கி அட்லூரி (Venky Atluri) தமிழில் நேரடியாக இயக்கியுள்ள புதிய திரைப்படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath And Sons). இந்த திரைப்படத்தில் கோலிவுட் நாயகனாக சூர்யா (Suriya) லீட் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் சூர்யா “சஞ்சய் விஸ்வநாத்” என்றார் அதிரடி தொழிலதிபராக நடித்துள்ளார். இந்த படமானது ஆரம்பத்தில் சூர்யா46 என அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 2025ம் ஆண்டு மே மாதத்தில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கிய நிலையில், சிறப்பாக நடைபெற்றுவந்தது. இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் இப்படத்தின் ஷூட்டிங் சிறப்பாக நடைபெற்றுவந்தது. இந்த படம் ஒரு பேமிலி பேக்ரவுண்ட் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதன் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இப்படம் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. அதை முன்னிட்டு இப்படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி மொட்டையடித்துள்ளார்.
இன்று (13/08/2026) திருப்பதியில் சிறப்பு தரிசனம் மேற்கொண்ட இயக்குநர் வெங்கி அட்லூரி, அங்கு தனது நேர்த்திக்கடனாக மொட்டையடித்துள்ளார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: முன்னாள் காதலரை அந்நியன் பட கதாப்பாத்திரங்களுடன் ஒப்பிட்டு பேசிய அனுபமா பரமேசுவரன் – வைரலாகும் வீடியோ!
வெங்கி அட்லூரி மொட்டையடித்து குறித்து வைரலாகும் எக்ஸ் பதிவு:
#VishwanathAndSons — #VenkyAtluri New Getup Change Before Release😍❤️ pic.twitter.com/RoQWWQb9zF
— Saloon Kada Shanmugam (@saloon_kada) August 13, 2026
நாளை திரையரங்குகளில் வெளியாகும் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்:
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் சூர்யா. இவரின் நடிப்பில் 46வது திரைப்படமாக உருவாகியுள்ளதுதான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்த படமானது பேமிலி, ஆக்ஷன், மற்றும் காமெடி போன்ற கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா டாண்டன் போன்ற பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில், இவரின் இசையில் சிறப்பாக பாடல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஒரு சில சலுகை எல்லாம் இந்த புது மாப்பிள்ளைக்குதான் கிடைக்கும்… கலகலப்பாக வெளியானது மொத ராத்திரி பட ட்ரெய்லர்!
இந்த படமானது, நாளை (14/08/2026) உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்திற்கு சென்சார் குழு யு/ஏ தரச் சென்சார் சான்றிதழை கொடுத்துள்ளது. அதன்படி 13 வயதிற்கு மேற்பட்டோர் இப்படத்தை திரையரங்குகளில் பார்க்கலாம். இப்படம் மொத்தமாக 2 மணி நேரமும் 41 நிமிடங்களும் கொண்டுள்ளது. நிச்சயம் கருப்பு படத்திற்கு பின், விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.