AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நான் முதன்முதாலாக பார்த்த சூர்யா சார் படம் அதுதான் – நடிகை மமிதா பைஜூ ஓபன் டாக்

Mamitha Baiju talks about Suriya movie experience | தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை மமிதா பைஜூ தான் முதன்முதலில் பார்த்த சூர்யாவின் படம் எது என்பது குறித்து பேசியது இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

நான் முதன்முதாலாக பார்த்த சூர்யா சார் படம் அதுதான் – நடிகை மமிதா பைஜூ ஓபன் டாக்
சூர்யா மற்றும் மமிதா பைஜூImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Aug 2026 18:35 PM IST

மலையாள சினிமாவில் நடிகையாக தனது சினிமா பயணத்தை தொடங்கி தற்போது தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மமிதா பைஜூ. இவர் ஆரம்ப காலக்கட்டத்தில் மலையாள சினிமாவில் நடிக்கத் தொடங்கினாலும் பிரேமலு படத்தின் வெளியீட்டிற்கு பிறகு மற்ற மொழிகளில் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதிலும் குறிப்பாக தமிழ்  மொழியில் நடிகை மமிதா பைஜூ வரிசைக்கட்டி படங்களில் நடிக்கத் தொடங்கினார். நடிகை மமிதா பைஜூ நடிப்பில் தமிழ் சினிமாவில் இதுவரை டியூட், கர மற்றும் ஜன நாயகன் என 3 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த மூன்று படங்களிலேயும் நடிகை மமிதா பைஜூவின் நடிப்பு ரசிகர்களிடையே அதிக அளவில் பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்ததாக திரையரங்குகளில் நடிகை மமிதா பைஜூ நடிப்பில் வெளியாக உள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்.

இந்தப் படம் வருகின்ற 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடிகை மமிதா பைஜூ நடித்துள்ளார். இந்த நிலையில் சூர்யாவின் நடிப்பில் அவர் முதன்முதலாக பார்த்த படம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நான் முதன்முதாலாக பார்த்த சூர்யா சார் படம் அதுதான்:

அதன்படி நடிகை மமிதா பைஜூ சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் நான் முதன்முதலாக என் அண்ணா உடன் இணைந்து சூர்யா சாரின் சில்லுனு ஒரு காதல் படத்தை தான் பார்த்தேன் என்று மமிதா பைஜூ கூறினார். அப்போது தொகுப்பாளர் கல்லூரியில் படிக்கும் போதா என்று கேட்க, அதற்கு சூர்யா அப்போது என்ன படித்துக்கொண்டு இருந்தாய் என்று மமிதாவிடம் கேட்க அவர் 5, அல்லது 6-ம் வகுப்பு என்று கூற அங்கு இருந்தவர்கள் எல்லாம் சிரித்து விடுவார்கள். இது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே… 9 ஆண்டுகளை நிறைவு செய்தது தளபதி விஜயின் மெர்சல் படம்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தளப் பதிவு:

Also Read… அர்ச்சனா கல்பாத்தி அகோரத்துக்கு அரசு பதவி.. முதல்வர் விஜய் கொடுத்த முக்கிய பொறுப்பு.. என்ன அது!

Follow Us