AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Adhik Ravichandran: அஜித்தின் டேர் டெவில் திரைப்படம் அப்படிதான் இருக்கும் – ஆதிக் ரவிச்சந்திரன்!

Adhik Ravichandran on Ajiths Dare Devil: நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் கூட்டணியில் 2-வது உருவாகிவரும் திரைப்படம்தான் டேர் டெவில். இந்த பாத்தின் அறிவிப்புகள் சமீபத்தில் வெளியானது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆதிக், டேர் டெவில் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து அப்டேட் கொடுத்திருக்கிறார்.

Adhik Ravichandran: அஜித்தின் டேர் டெவில் திரைப்படம் அப்படிதான் இருக்கும் – ஆதிக் ரவிச்சந்திரன்!
டேர் டெவில் திரைப்படம் பற்றி ஆதிக் ரவிச்சந்திரன்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 09 Aug 2026 21:32 PM IST

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran). இவர் கடந்த 2015ம் ஆண்டில் “திரிஷா இல்லனா நயன்தாரா” (Trisha Illana Nayanthara) என்ற படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்திருந்த நிலையில், இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் பேசப்பட்டது. இந்த படத்திற்கு பின் சிலம்பரசனுடன் AAA என்ற படத்தில் இணைந்தார், இப்படம் வணிகம் மற்றும் விமர்சன ரீதியாக பெரும் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து 2023ம் ஆண்டில் வெளியான “மார்க் ஆண்டனி” (Mark Antony) என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மீண்டும் வரவேற்பை பெற்றிருந்தார். விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பில் வெளியான இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. பின் அஜித்துடன் (Ajith) குட் பேட் அக்லி (Good Bad Ugly) என்ற படத்தில் இணைந்து ஹிட்டை கொடுத்தார்.

அஜித்தின் சினிமா வாழ்க்கையிலே அதிகம் வசூல் செய்த படமாக இப்படம் அமைந்தது. இதையடுத்து ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில், டேர் டெவில் என்ற படத்தில் அஜித் இணைந்துள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், டேர் டெவில் படம் எப்படி இருக்கும் என்பது குறித்து பேசியுள்ளார்.

இதையும் படிங்க: ராக்கா பட ஷூட்டிங் எங்கு நடக்கிறது.. அப்டேட் கொடுத்த அல்லு அர்ஜுன்

அஜித் குமாரின் டேர் டெவில் படத்தின் கதை எவ்வாறு இருக்கும் என்பது குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் பேச்சு:

அந்த நிகழ்ச்சியில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், “குட் பேட் அக்லி படம் என்றால் அது ஒன்று மட்டும்தான், மீண்டும் ஒரு GBU பண்ணினா மீண்டும் அதையே பார்ப்பதுபோல ஆகிவிடும். அடுத்துவரும் திரைப்படம் (டேர் டெவில்), GBU படத்தை விடமும் மாறுபட்ட படமாக இருக்கும். அந்த படம் முழுக்க முழுக்க மாஸ் பொழுதுபோக்கு மற்றும் முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக இருக்கும்” என அதில் அவர் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: லக்கி பாஸ்கர் படம் பயோ பிக்கா? இயக்குநர் வெங்கி அட்லூரி விளக்கம்

அஜித் குமாரின் டேர் டெவில் திரைப்படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, ஷாலினி அஜித் குமார் இந்த டேர் டெவில் படத்தை தயாரிக்கிறார். அஜித் குமார் ஆக்ஷன் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக எந்த நடிகை என இன்னும் தெரியவில்லை. இப்படத்தில் அனிருத் இசையமைக்க, சிறப்பான மாஸ் பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us