அஜித்தின் படங்களை ஏன் தயாரிக்கவில்லை? – விளக்கம் கொடுத்த அர்ச்சனா கல்பாத்தி!
Archana Kalpathi About Ajith Kumar: கோலிவுட் சினிமாவில் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஏஜிஎஸ் எண்டெர்டைமென்ட் நிறுவனம். இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தி படங்களை உருவாக்கிவருகிறார். இவர் அஜித் குமாரின் படங்களை ஏன் தயாரிக்கவில்லை என்பது குறித்து விளக்கம் கொடுத்திருக்கிறார்.
தமிழ் சினிமா கொண்டாடும் நாயகனாகவும், கார் ரேஸராகவும் இருந்துவருபவர் அஜித் குமார் (Ajith Kumar). இவர் நடிகராக தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவருகிறார். இவரின் நடிப்பில் இதுவரை மொத்தமாக 63 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. தற்போது அஜித் குமார் கார் ரேஸ் (Car Race) பயிற்சி மற்றும் போட்டிகளில் தீவிரமாக இருந்துவருகிறார். இந்த போட்டிகளுக்கு நடுவே படங்களிலும் நடிக்கவுள்ளார்.இவர் தனது 64வது படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Aadhik Ravichandran) இயக்க, ஷாலினி அஜித் குமார் (Shalini Ajithkumar) தயாரிக்கவுள்ளார். இப்படத்திற்கு படக்குழு “டேர் டெவில்” (Dare Devil) என டைட்டில் வைத்துள்ளது. இதில் அனிருத் இசையமைக்க, இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி (Archana Kalpathi) பேசியிருந்தார். அந்த நேர்காணலில் பேசிய அவர், அஜித் குமாருடன் படங்களில் இணையாதது மற்றும் ஏன் இணையவில்லை என்பது குறித்து விளக்கம் தெரிவித்துள்ளார். அவர் அப்படி என்ன பேசியிருந்தார் என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.




இதையும் படிங்க: இன்று கோலாகலமாக நடைபெறும் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி
அஜித் குமாரின் படங்களை தயாரிக்காததன் காரணம் பற்றி தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பேச்சு:
அந்த நேர்காணலில் பேசிய தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, “நாங்கள் தற்போது அஜித் குமார் சாருடன் இணைந்து பணியாற்ற முயற்சித்து வருகிறோம். AGS நிறுவனமும், அஜித் சாரும் ஆர்வத்துடன் செய்யக்கூடிய ஒரு கதையை நாங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
இதையும் படிங்க: ஓணம் ரேசில் இணைந்தது நிவின் பாலியின் பெத்தலேக குடும்ப யூனிட் – வைரலாகும் பதிவு
அஜித் சாருக்கு இது தெரியும், மேலும் நாங்கள் சுரேஷ் சந்திரா சாருடன் தொடர்பில் இருக்கிறோம். நாங்கள் தொடர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கிறோம். கதை எப்போது பொருந்துகிறதோ, அப்போது படம் நடக்கும்” என அதில் அவர் கூறியுள்ளார். தற்போது இது தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.
அஜித் குமாருடன் படங்களில் இணைவது குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பேசியது தொடர்பான பதிவு:
Q: Why Haven’t you worked with #Ajithkumar yet..❓#ArchanaKalpathi: We are still trying for it.. But we have to find a story that both of us are excited to do.. Ajith Sir also knows this.. I’m still in touch with Suresh Chandra Sir.. He should like the story that the director… pic.twitter.com/AmUEHZYBpg
— Laxmi Kanth (@iammoviebuff007) August 8, 2026
நடிகர் அஜித் குமார் தற்போது இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் டேர் டெவில் என்ற புது படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், இன்னும் இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் தொடங்கவில்லை. அஜித் தற்போது கார் ரேஸ் பயிற்சியில் இருக்கும் நிலையில், படத்தின் ப்ரீ புரொடக்ஷன்ஸ் பணிகள் நிறைவுக்கு வந்துள்ளது. வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் தொடக்கத்தில் இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் ஷூட்டிங் தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.